வியாழன், 28 மார்ச், 2019

தயாநிதி மாறன் சொத்து விவரம்

தயாநிதி மாறன் சொத்து விவரம்


தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அசையும் மற்றும் அசையா சொத்து விரவங்களையும் பதிவு செய்துள்ளார். 

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் தனது அசையும் சொத்தாக மூன்று கோடியே அறுபத்து ஐந்து லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்மதிப்புடைய சொத்துகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி ப்ரியாவுக்கு ரூ 3.09 கோடி மதிப்புடைய அசையும் சொத்துகள் உள்ளதென்றும், மகன் கரன் பெயரில் 4.92 கோடி மதிப்புடைய சொத்துகள் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்தாக திருக்குவளையில் ரூ 59,000 மதிப்புடைய இடம் உள்ளதென்று குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரிலோ அல்லது மகன் கரன் பெயரிலோ வேறெதுவும் அசையா சொத்துகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஏதும் கடன் இல்லை என்று பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 21 மார்ச், 2019

தனி சின்னத்தில் போட்டி - வைகோ முடிவு


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி அவர்கள், தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்.

வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி அவர்கள், தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்.

செவ்வாய், 19 மார்ச், 2019

பாமகவுக்கு கிடைத்த வெற்றி!

காவல்துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு
தனிப்பிரிவு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி!
                 -----அறிக்கை-------- 
தமிழ்நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகள்  பாதுகாப்புக்காக காவல்துறையில் புதிதாக தனிப்பிரிவு  தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள்  எழுப்பட்டு வரும் நிலையில், அவற்றைப் போக்கும் நோக்குடன் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை  நிச்சயமாக பயனளிக்கும். இந்த நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்- பெண்களின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. மகளிருக்கு எதிரான குற்றங்கள் சில கும்பல்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படு வரும் நிலையில், அவற்றை  தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்காக தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்; அப்பிரிவின் தலைவராக காவல்துறை தலைமை இயக்குனர் நிலையில் பெண் இ.கா.ப. அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று 2014-15 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் இந்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் இதை முக்கிய வாக்குறுதியாக பா.ம.க. முன்வைத்திருந்தது. பெண்கள் பாதுகாப்பில் பா.ம.க. அந்த அளவுக்கு உறுதியாக இருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கை 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. மகளிரின் பாதுகாப்புக்காக காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்ற  பா.ம.க.வின் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்ததும் இதற்கு பெரும் துணையாகவே அமைந்தது. பெண்களின் பாதுகாப்புக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் தனிக்காவல் பிரிவு கட்டாயத் தேவையாகும்.

பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களுக்கு காதல் நாடக வலைவீசி நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் அனைவர் மனங்களிலும் அமிலம் ஊற்றியதற்கு இணையான வலியையும், வேதனையையும் ஏற்படுத்தின என்பதை  எவரும் மறுக்க முடியாது. இது போன்ற கொடூரங்களும், பணப் பறிப்புகளும் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன; இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதை வெளிப்படுத்த முடியாமல் நடை பிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். இவை ஒருபுறமிருக்க, எவ்வளவு தீய பழக்கத்திற்கு ஆளானவர்களாக இருந்தாலும், வாழ்வாதாரம் தேட வழியில்லாதவர்களாக இருந்தாலும்  தாங்கள் காதலைச் சொன்னால் அதை பெண்கள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு பிரிவினரிடம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு ‘‘ஒருதலைக் காதல் கொலை விபரீதங்கள்’’ வளர்த்து விடப்பட்டுள்ளன.

இத்தகைய தீமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாட வேண்டும் என்ற சிந்தனை தான் பெண்கள் பாதுகாப்புக்காக தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அடித்தளமாக அமைந்தது. அந்தக் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டிருப்பது  பெண்களைப் பாதுகாப்பதில் முக்கியமான மைல்கல் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் இந்தப் பிரிவு  இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் நிலை அதிகாரியும், சென்னை மற்றும் மாவட்டங்களுக்கு கண்காணிப்பாளர் நிலையிலான  அதிகாரிகள் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் இப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக இப்பிரிவின்  தலைவராகவும்,  மண்டல கண்காணிப்பாளர்களாகவும் மகளிரை நியமிக்க வேண்டும். இப்பிரிவின் மூலம் பொது இடங்களில் சாதாரண உடையில் பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக அதிக எண்ணிக்கையில் மகளிர் காவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் காவலர்கள் நியமனத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சனி, 16 மார்ச், 2019

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - ஜெ.தீபா அதிரடி

40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா அதிரடி


சென்னையில் (மார்ச் 15) செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் நிலைப்பாடு குறித்து விளக்கிய தீபா, “வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளோம். இதுவரையில் ஏன் இந்த முடிவை எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். கூட்டணி தொடர்பாக நாங்கள் அதிமுக மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த காரணத்தால் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது, கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று தமிழக முழுவதுமுள்ள தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.