திங்கள், 17 பிப்ரவரி, 2020

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும்! - DR.S. ராமதாஸ்


அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை
கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும்! - DR.S. ராமதாஸ்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து அடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரியை பிரித்து, அரசு வேளாண் கல்லூரியாக அறிவித்து நடத்த வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை ஆகும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப் பட்டதற்கு எத்தனை காரணங்களும், எவ்வளவு நியாயங்களும் இருந்தனவோ, அதைவிட அதிகமான காரணங்களும், நியாயங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை தனி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு உள்ளன. மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை, அண்ணாமலை பல்கலை கழகத்தில் உள்ள கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டால், மருத்துவ மாணவர்களுக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.5 லட்சம் குறையும் என்பது தான் மிகவும் முதன்மையான காரணமாக இருந்தது. ஆனால், வேளாண் கல்லூரியைப் பொறுத்தவரை கட்டணத்தையும் தாண்டி ஏராளமான காரணங்கள் உள்ளன.

என் பொதுவாழ்க்கையில் நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி - வைகோ


என் பொதுவாழ்க்கையில் நீதிமன்றத்தில் 
எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி - வைகோ

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, வைகோ தொடுத்திருந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தலைமை நீதிபதி ஷாஹி, நீதிபதிகள் சுந்தரேசன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ அவர்கள் எடுத்துரை வாதம்:

சீமைக் கருவேல மரம் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேடானது. இதனுடைய வேர்கள் பூமிக்குள் வெகு ஆழத்திற்கு ஊடுருவி, பெருமளவு நீரை உறிஞ்சக் கூடியது. பிராண வாயுவை அதிகமாக உறிஞ்சிக் கொண்டு, கரியமல வாயுவை வெளிப்படுத்துகின்றது. எனவே இம்மரத்தில் பறவைகள் கூடு கட்டாது, ஆடு மாடுகள் நிழலுக்குக்கூட ஒதுங்காது.

ஆடு மாடுகள் சினைப் பிடித்தலை இம்மரம் தடுக்கின்றது. இதன் அருகில் வேறு செடி, கொடிகள் வளர முடியாது. எனவே இம்மரம் சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடான ஆபத்தாக இருந்து வருகின்றது. எனவே இம்மரங்களை தமிழகத்திலிருந்து முற்றாக அகற்றக் கோரி வழக்குத் தொடுத்திருக்கின்றோம். பரப்புரைப் பயணங்களை மேற்கொண்டோம்.

பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் ஆதரவு அளித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஆங்காங்கு மேற்கொண்டார். அகற்றுகின்ற பணியில் நீதிபதிகளும் பங்கேற்றார்கள். இப்பணிகளை மேற்கொள்வதற்கான மதுரை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவில், 150 வழக்கறிஞர்கள் ஆணையர்களாகச் செயல்பட்டனர்.

இம்மரங்களை முற்றாக அகற்றுவது குறித்து ஆய்வறிக்கை தருவதற்காக உயர்நீதிமன்றம் நியமித்த குழுவில் தமிழ்நாடு அரசு தலைமை வனக் காவலர் மற்றும் வனத்துறையின் இரண்டு உயர் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் தமிழ்நாடு வனத்துறை எதிர்த்து வந்தது. இதன் அடிப்படையில் அந்தக் குழு அளித்த அறிக்கை ஒருதலைப்பட்சமானது; ஏற்கத்தக்கது அல்ல.

சீமைக் கருவேலம் என்கின்ற வேலிக் காத்தான் மரம் ஆப்பிரிக்கா கண்டத்தில் பிசாசு மரம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வழக்கு குறித்து நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற மனுவில், இம்மரம் குறித்து உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் வைத்திருக்கின்றேன். இந்தியாவின் பல ஆராய்ச்சி நிறுவனங்ளுடைய முடிவுகளையும் வைத்திருக்கிறேன்,” என்று வைகோ குறிப்பிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி வைகோ அவர்கள் கையில் வைத்திருந்த ஆவணங்களைக் கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார். அப்போது வைகோ சுற்றுச் சூழல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்தியாவில் சிறந்த நிறுவனம் நாக்பூரில் உள்ள நீரி அமைப்பாகும் (National Environmental Engineering Research Institute -NEERI).

ஏற்கனவே இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அடிப்படையில், சீமைக் கருவேல மரங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார்.

வைகோ அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, சீமைக் கருவேல மரங்கள் குறித்து நீரி நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ அவர்கள், இது என் வாழ்நாளில் நீதிமன்றத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி. சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கின்றது.

அண்மைக் காலத்தில் நான் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்தது இல்லை. தமிழ்நாட்டு மண்ணிலிருநது சீமைக் கருவேல மரங்கள் அடியோடு அகற்றப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று குறிப்பிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர்கள் இரா.அருணாசலம், கோ.நன்மாறன், இரா.பிரியகுமார், ப.சுப்பிரமணி, இரா.செந்தில்செல்வன், தி.பாலாஜி, சங்கரன், வினோத்குமார், பிரபாகரன் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

தமிழக அரசு இப்படியா தேவையற்ற “ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசத்தை” காட்ட வேண்டும்? - கி.வீரமணி


மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம்  அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாக இருக்கிறது! இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது! - கி.வீரமணி

மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தனக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற மிருக பலத்தை வைத்து, அதன் அரசியல் ஆணையரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி சில சட்டங்களை - முஸ்லீம்களைக் குறி வைத்தே கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதால், நாடு தழுவிய மக்கள் கிளர்ச்சி  வெடித்துக் கிளம்பி நடந்து வருகிறது.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

தமிழக அரசு உடனடியாக தொடங்கி விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். - ஜி.கே.வாசன்


தமிழக நிதிநிலை அறிக்கையில் தொல்லியல் துறைக்கும், புதிய அகழ்வைப்பகம் அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யும் நிதி தொடர்பான முக்கிய அம்சம் இடம் பெற்றிருப்பதால் அதற்குண்டான பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்கி விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். - ஜி.கே.வாசன்

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடரும் அநீதி ; சமூகநீதி மீட்கப்பட வேண்டும்! - DR.S. ராமதாஸ்


ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடரும் அநீதி ;
சமூகநீதி மீட்கப்பட வேண்டும்! - DR.S. ராமதாஸ்

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், வேதியியல், தமிழ், பொருளியல், வரலாறு உள்ளிட்ட 7 பாடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிப்பில் இடஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை சென்னை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ள நிலையில், அந்த விதிமீறல்களை சரி செய்து சமூகநீதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாமல், அவசர, அவசரமாக நியமன ஆணைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.