வியாழன், 30 நவம்பர், 2023

இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழு பிராந்திய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.


 புதுதில்லியில் நடைபெற்ற வருடாந்திர இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமானே, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் திரு டேவிட் வில்லியம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.  பிராந்திய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்த அவர்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் சாத்தியமான ஒத்துழைப்பு, ஏவுகணை அமைப்புகள், மின்சார உந்துவிசை ஆகியவற்றில் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு முன்மொழிவுகள் குறித்தும் விவாதித்தனர்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

சாதி, மதம், மொழி மற்றும் பிராந்தியத்தைத் தவிர, நம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் உள்ளன. - திருமதி திரௌபதி முர்மு உரை


 நமது 77வது சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நம் அனைவருக்கும் புகழ்வாய்ந்த நன்னாளாகும்.  ஏராளமான மக்கள்  இவ்விழாவைக் கொண்டாடுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  நகரங்களிலும், கிராமங்களிலும், இந்தியாவின் எல்லா இடங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும்,  நமது சுதந்திர தின விழாவைக் கொண்டாட தயாராகி வருவது  பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகும். சுதந்திரத்தின்  அமிர்தப் பெருவிழாவை மக்கள் மகத்தான ஆர்வத்துடன் கொண்டாடிவருகிறார்கள்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எனது குழந்தைப் பருவ நாட்களை நினைவூட்டுகின்றன. எங்களின் கிராமப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற உற்சாகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது எங்களில், மெய்சிலிர்ப்பு ஏற்பட்டதை நாங்கள் உணர்ந்தோம். எங்கள் இதயங்களில் முழுமையான தேசபக்தப் பெருமிதத்துடன், தேசியக் கொடிக்கு நாங்கள் வணக்கம் செலுத்தி, தேசிய கீதம் பாடினோம்.  இனிப்புகள் வழங்கப்பட்டு, தேசபக்தப் பாடல்கள் பாடப்பட்டன. இவை எங்களின் மனங்களில்  பல நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்தன. நான் ஒரு பள்ளி ஆசிரியரானபோது, இந்த அனுபவங்களை மீண்டும் பெறும் வாய்ப்பைப் பெற்றது என் அதிர்ஷ்டமாக இருந்தது.

சனி, 20 மே, 2023

2047-ம் ஆண்டுக்கான புதிய இந்தியாவின் செயல்திட்டத்தை மாணவர்கள் வகுக்க வேண்டும். - குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்


 தேசம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் 2047ல், அயராது உழைக்கவும், வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், புதிய இந்தியாவுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். என்று  மாணவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு  ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார். சவால்களில் இருந்து வாய்ப்புகளை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்த அவர், "உங்கள் மனதில் ஒரு அற்புதமான யோசனையை நிறுத்துவதை விட ஆபத்தானது எதுவுமில்லை. உங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து உங்கள் திறனைப் பயன்படுத்திக் கொண்டு யோசனைகளைச் செயல்படுத்துங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 70வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு  துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். விழாவின் போது, பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான குடியரசு  துணைத்தலைவர், பிரபல கல்வியாளர் டாக்டர் சுதா என். மூர்த்தி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரஞ்சன் கோகோய் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

புதன், 3 மே, 2023

மாலத்தீவு - இந்தியா இடையேயான உறவு காலப்போக்கில் மேலும் வலுவடையும்.- திரு ராஜ்நாத் சிங்


 3 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் இரண்டாவது நாளில்,  2023 மே 2-ம் தேதியன்று மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளிடம் (MNDF) ஒரு விரைவு ரோந்து கப்பல் மற்றும் தாக்குதல் கப்பலை ஒப்படைத்தார். மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா அகமது தீதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திங்கள், 1 மே, 2023

பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம். - வைகோ

 தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க

மே நாளில் உறுதி ஏற்போம்.- வைகோ அறிக்கை

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’   வேலை செய்ய தொழிலாளர்கள்  நிர்பந்திக்கப்பட்டு பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என கசக்கிப் பிழியப்பட்டனர்.

1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.