செவ்வாய், 27 டிசம்பர், 2022

தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

 தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில்  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவு நீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. 

தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜித் குமார் மிஸ்ரா  இந்தியா சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் இவ்வங்கியின் இந்திய அலுவலகப் பொறுப்பு அதிகாரி ஹோ யூன் யோங்கும்  கையத்திட்டனர்.

ஐதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரை


 நாட்டின் 75வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஐதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் (27.12.2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார். ஐதராபாத் விடுதலை இயக்கம் தொடர்பாகவும், அதில் பங்கேற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் தொடர்பாகவும் நடைபெறும் புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கிவைத்தார்.

நீர் மின் திட்டங்களில் முன்னெச்சரிக்கை அமைப்புமுறையை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.- மத்திய எரிசக்தி அமைச்சகமும், டி.ஆர்.டி.ஓ-வும் கையெழுத்து


 அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள நீர் மின் திட்டங்கள்/ மின் நிலையங்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை அமல்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் மத்திய எரிசக்தி அமைச்சகமும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வும் கையெழுத்திட்டுள்ளன. எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமாரும், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாதுகாப்புத் துறையின் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) செயலாளருமான டாக்டர் சமீர் வி. காமத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.- DR. அன்புமணி ராமதாஸ்


 மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! 

- DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற  நோக்குடன் முதலமைச்சர் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது. இதை சட்டப்பூர்வமாக்க தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடாகும்.

நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! - DR .அன்புமணி ராமதாஸ்



 நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! 

- DR .அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய  ஆசிரியர் தேர்வு வாரியம் முழுநேர தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசைலம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தார்.


 ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு திட்டப்பணிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தார். 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப்பணிகளுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் முழுமையாக நிதி அளித்திருந்தது.

 தேசிய புனித யாத்திரை  புத்துயிர் நடவடிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பிரஷாத் (PRASHAD) திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீசைலம் ஆலயத்தை உலகத்தரத்திலான வழிபாட்டுத்தலமாகவும், சிறந்த சுற்றுலா மையமாகவும் மாற்றும் நோக்கில் இதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கொவிட் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.


 கொவிட் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று  திரு மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். கொவிட் தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.  கொவிட் சிகிச்சையின் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுவதாக அவர் கூறினார்.

எஃகு உற்பத்தியில் இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராகவும் வளர்ந்துள்ளது.


 கட்டுமானம், உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, பொறியியல், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க துறைகளில் எஃகு, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் எஃகுத் துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. எஃகு உற்பத்தியில் இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராகவும் வளர்ந்துள்ளது.

உற்பத்தி மற்றும் பயன்பாடு:

நடப்பு நிதியாண்டின் (2022,ஏப்ரல்- நவம்பர்) முதல் எட்டு மாதங்களில் எஃகுத் துறையின் உற்பத்தி செயல்பாடு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது. உள்நாட்டு எஃகு உற்பத்தி 78.090 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6.09% அதிகமாகும். உள்நாட்டு எஃகின் பயன்பாடு கடந்த ஆண்டின் 67.32 மில்லியன் டன்னைவிட 11.9% அதிகரித்து, இந்த ஆண்டு 75.340 மில்லியன் டன்னாக பதிவானது. உள்நாட்டு கச்சா எஃகு உற்பத்தி, 81.96 மில்லியன் டன்னாக, கடந்தாண்டை விட 5.6% அதிகமாக இருந்தது.

திங்கள், 26 டிசம்பர், 2022

வீர பாலகர் தினம், பாஞ்ச் பிராண்ஸ் எனப்படும் ஐந்து தீர்மானங்களுக்கான உயிர் சக்தி போன்றதாகும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது 300 சிறார்கள் பங்கேற்று சப்த கீர்த்தனைகள் பாடிய நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.  சுமார் 3000 குழந்தைகள் பங்கேற்ற அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். குரு கோபிந்த் சிங்கின்  பிரகாஷ் பூரப் தினமான 2022 ஜனவரி 9-ந் தேதி அன்று   ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், டிசம்பர் 26-ந் தேதி வீர பாலகர் தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதேசிங்கின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.