கனிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 பிப்ரவரி, 2020

திமுக மகளிர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


திமுக மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தலைமையில் நடைபெற்ற, திமுக மகளிர் அணி – மகளிர் தொண்டரணி – பிரச்சாரக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக:

பொருளாதார சீர்கேடு - வேலையில்லாத் திண்டாட்டம் - விவசாயிகள் படும் துன்பம் என நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய தலையாய பிரச்சினைகள் ஏராளம் இருக்கிறது. அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற ஒன்றை தேவையில்லாமல் கொண்டு வந்து, அதை அவ்வளவு அவசரமாக இரவிலேயே நிறைவேற்ற அவசியம் என்ன வந்தது?

வியாழன், 23 ஜனவரி, 2020

"ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்.. " மறுபதிவிட்ட கனிமொழி




ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...

என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.

வியாழன், 27 ஜூன், 2019

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மக்களவையில் வெடித்த கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  மக்களவையில் வெடித்த கனிமொழி 


மக்களவையில் இன்றைய விவாத நேரத்தின் போது பேசிய தூத்துக்குடி 
மக்களவைத் தொகுதி தி.மு.க. எம்.பி., கனிமொழி அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  சிபிஐ விசாரணை குறித்து மிகவும் கொதிப்புடன் பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு 100 நாட்களாக அமைதி வழியில்