ரூ.58.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், எல்எஸ்டி ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த தகவல் படி, சென்னையில் வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த பார்சல் சோதனை செய்யப்பட்டது. அந்த அட்டைபெட்டி பார்சலை திறந்து பார்த்தபோது, ஒரு வாழ்த்து அட்டை மற்றும் இரண்டு சில்வர் நிற பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவற்றில் ஒன்றை பிரித்து பார்த்தபோது, இளஞ்சிவப்பு நிற மாத்திரைகள் ஒரு பக்கத்தில் மண்டை ஓட்டு வடிவில் இருந்தன. இவை எம்டிஎம்ஏ போதை அல்லது பரவச மாத்திரைகள் என அழைக்கப்படுகிறது. மொத்தம் 994 மாத்திரைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம். இவை பறிமுதல் செய்யப்பட்டன.
