சோனியா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோனியா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஏப்ரல், 2021

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவது ஒரு தேசிய சவால் என்று இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் நம்புகிறது. - காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி


கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவது ஒரு தேசிய சவால் என்று இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் நம்புகிறது. அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். நாங்கள் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் முதல் எங்களுடைய ஒத்துழைப்பு கரங்களை நீட்டி வருகிறோம். 

எவ்வாறாயினும், கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டைக் கடுமையாகத் தாக்கியுள்ளது என்கிற உண்மையை நாம் மறுக்க முடியாது. நம்மைத் தயார் செய்துகொள்ள ஒரு வருடம் இருந்தபோதிலும், வருந்தத்தக்க வகையில், நாம் மீண்டும் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

ஞாயிறு, 5 ஜூலை, 2020

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் எழுதிய கடிதம்


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில், பிற பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

அகில இந்திய ஒதுக்கீட்டின்படி, எஸ்சி. பிரிவினருக்கு 15 சதவிகிதமும், எஸ்டி. பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகிதமும் மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்கள் நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.