சோம் பிரகாஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோம் பிரகாஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜூலை, 2021

ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கை: தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.- தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ்


 மேக் இன் இந்தியா திட்டம் 2014ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டது. முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும், புத்தாக்கத்தை வளர்ப்பதற்காகவும், சிறந்த உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காகவும், இந்தியாவை உற்பத்தி மற்றும் புத்தாக்க மையமாக மாற்றுவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.  மேக் இன் இந்தியா திட்டம் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டம் 2.0-ன் கீழ் 27 துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதலீட்டு வசதிகளை செய்யும் நடவடிக்கையின் கீழ், மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறது.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், மாநில அரசுகளும் இதற்கான உதவிகளை செய்கின்றன. முதலீட்டை ஈர்ப்பதற்கான நிகழ்ச்சிகள், உச்சிமாநாடுகள் நடத்தப்படுகின்றன.  இதன் காரணமாக இந்தியா  கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் 81.72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அன்னிய நேரடி முதலீடை பதிவு செய்துள்ளது.