கிராம வங்கிகளில் நகைக் கடன்களுக்கு 8.25% வட்டி
வன்மையான கண்டனத்திற்குரியது.
- பெ.சண்முகம்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
கிராமப்புற மக்களுக்கு எளிதில் வங்கிச் சேவை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது கிராம வங்கிகள். பாண்டியன், பல்லவன் என்று பல்வேறு பெயர்களில் துவங்கப்பட்ட கிராம வங்கிகள் தற்போது மாநில அளவில் தமிழ்நாடு கிராம வங்கிகள் என்று மாற்றப்பட்டு 632 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
