தமிழ்ப் பேரரசு கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் பேரரசு கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 நவம்பர், 2021

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில் வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். சூர்யா, ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம்.



இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில்  வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். சூர்யா, ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம்.

இருளர் மற்றும் பழங்குடி தமிழர்களின் வாழ்வியல் துயரங்களை திரையினூடாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக "ஜெய்பீம்" படக்குழுவினருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்திவிட்டு படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கின்ற நோக்கத்திற்காகவும் தமிழ் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான அக்னி குண்டத்தை திட்டமிட்டு நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாக காட்சிப்படுத்தியதிற்காக அப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா அவர்களுக்கும், இயக்குநர் ஞானவேல் அவர்களுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்.- வ.கௌதமன்

 21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய். - வ. கௌதமன்

காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத  சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், ஒருவர் கடுமையாக வயிற்றை கிழித்துக்கொண்டும், இருவர் தூக்கிட்டுக்கொண்டும் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருப்பது பெரும் கவலைக்கும் வேதனைக்கும் உரிய விடயம். 

வியாழன், 1 ஜூலை, 2021

‘நீட்’டை விரட்ட ஒட்டுமொத்த தமிழினமும் கட்டாயம் மீண்டும் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.- வ. கெளதமன்


 'நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட  தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும். -  வ. கெளதமன்

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்து, விளிம்பு நிலை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஒன்றிய பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்க, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க ஒன்று திரண்டது போல, ‘நீட்’டை விரட்ட ஒட்டுமொத்த தமிழினமும் கட்டாயம் மீண்டும் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.

சனி, 19 ஜூன், 2021

ஐயா பாலகுருசாமி உண்மையான கல்வியாளராக இருந்திருந்தால், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி உரிமையினை, இந்திய ஒன்றிய அரசு தனது கையில் அபகரித்த போதே எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டும்.- வ.கௌதமன்


 பதவிக்காக ''நீட்" தேர்வை ஆதரிக்கும் பாலகுருசாமிக்கு கடும் கண்டனம். 

வ. கௌதமன்

அரியலூர் அனிதா தொடங்கி, செல்வன் விக்னேஷ் வரை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட எங்கள் வீட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் 'நீட்' தேர்வினை எதிர்த்து தங்கள் உயிர்களைப் பலியிட்டுக் கொண்டனர். எங்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு நயவஞ்சகக் கூட்டம், எங்கள் பிள்ளைகளின் விலை மதிக்க முடியாத உயிரிழப்புகளை, 

காதல் தோல்வியில் செய்துகொண்ட தற்கொலை என்று கூறி கொண்டாடி மகிழ்ந்தது. அதிலும் அண்மை காலமாக,  அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி அவர்கள், இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், 'நீட்' தேர்விற்கு ஆதரவாகவும் பேசி, ஒன்றிய அரசிற்கு ஓயாது வெண்சாமரம் வீசி வருகிறார். ஓய்வு பெற்ற பின்பும், தான் மீண்டும் ஒரு பெரும் பதவியை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக, தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் 

சனி, 5 ஜூன், 2021

ஈழத் தமிழர்களுக்கு "இரட்டைக் குடியுரிமை" வழங்குங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வ.கௌதமன் கோரிக்கை.


 ஈழத் தமிழர்களுக்கு "இரட்டைக் குடியுரிமை" வழங்குங்கள். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வ.கௌதமன் கோரிக்கை.

1981ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு, ஜூலை கலவரத்தில், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைக்க உலகம் முழுக்க சிதறியது ஈழத் தமிழினம். ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், நம் தாய்த் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தார்கள்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

"இயற்கையை கருவறுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020-ஐ (EIA-2020) மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!.” - வ.கௌதமன்


"இயற்கையை கருவறுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020-ஐ (EIA-2020) மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!.” - வ.கௌதமன்

"மனிதர்கள் வாழத்தகுந்த கிரகமாக பூமியை மாற்றவேண்டும்" இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் மதிப்புமிகு. அப்துல்கலாம் அவர்கள் இறப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு ஆற்றிய உரையின் தலைப்பு இது. ஈவு இரக்கமற்ற முறையில் மனிதர்கள் இயற்கையை சிதைத்தனால்தான் இன்று கொடூர கொரோனா மனித குலத்தை கொத்துக் கொத்தாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அதில்கூட பாடம் கற்றுக்கொள்ளாத இந்திய ஒன்றிய அரசு இயற்கையை கருவறுக்கும்  இ.ஐ.ஏ -2020 என்கிற வரைவைக் கொண்டு வருவது மனித குலத்திற்கு எதிரானது என்பதை கடும் கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.