திருமுருகன் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமுருகன் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 மே, 2020

அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!


அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை 
மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடு செய்யும் விதமாக, அரசு நிர்வாகத்தில்  சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் நாடு அரசு திட்டமிட்டு, அதன்படி பல்வேறு அறிவிப்புகளோடு தமிழ் நாடு அரசுப் பணிகளில் புதிய பணியிடங்களை உருவாக்கவும் தடைவிதித்துள்ளது. அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது வரவேற்கக்கூடியது என்றாலும், அரசுப்பணிகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடைவிதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை முழுவதும் நிரப்பப்படாததால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமையும், அலுவலங்களில் பணித்தொய்வும் ஏற்பட்டுள்ளது. இது அரசுப் பணியாளர்களை மட்டுமல்ல, மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்நிலையில் புதிய பணியிடங்கள் உருவாக்கக் கூடாது என்று அறிவித்திருப்பதன் மூலம் பணிச்சுமையும், பணித்தொய்வும் மேலும் அதிகரிக்கவே செய்யும். இதனால் மக்கள் கடும் துயரத்துக்குள்ளாவார்கள்.

ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா தொற்று பேரிடர் - தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்


கொரோனா தொற்று பேரிடர் - தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

கொரோனா தொற்றுப் பரவல் உடல்நல சிக்கலோடு இணைந்து பொருளாதார சிக்கலையும் மக்கள் மீது திணித்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவின் பின்னே உள்ள முக்கியத்துவம் சரியானதாக இருக்கும் போதிலும், பொருளாதார நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது.

அன்றாட ஊதியப் பணியாளர்களும், முறைசாரா தொழில்களில் இருப்பவர்களும் (informal sectors), துணிக்கடை, நகைக்கடை போன்ற பெரிய கடைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், கடைநிலை ஊழியர்களும், இதர தினசரி உழைப்பாளர்களும் என பெரும்பான்மை மக்கள் பொருளாதார ரீதியாக மிகப் பெரும் இன்னலை சந்திக்க இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப ஊழியர்களைப் போன்று வீட்டுக்குள் அமர்ந்து வேலையை முடித்து ஊதியம் பெறும் நிலை பெரும்பான்மை மக்களுக்கு கிடையாது. நோய்த் தாக்குதலோடு இணைந்து வந்திருக்கிற பொருளாதார நெருக்கடி பெரும்பான்மை உழைக்கும் மக்களை பெரும் சிக்கலுக்குள் தள்ளிட இருக்கிறது. அவசர கால அடிப்படையில் அதனை சரிசெய்து மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

பின்வரும் கோரிக்கைகளை மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கிறது.