துரைமுருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துரைமுருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஏப்ரல், 2022

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை” உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு.- துரைமுருகன்


 “வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை” உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த - அ.தி.மு.க. ஆட்சிக்குத் தலைமை வகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் திரு. பழனிச்சாமி அவர்கள், “அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது” என்று அபாண்டப் பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-  திமுக பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் அறிக்கை.

அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டம் என்றாலும் - வன்னியர் சமுதாயத்திற்கு அளித்த உள் இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திட உயர்நீதிமன்றத்திலும் - உச்சநீதிமன்றத்திலும் அனைத்து விதமான வாதங்களையும் முன் வைத்தது - மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. எந்த எந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது. அதுகூட வேறு ஏதோ மயக்கத்தில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கும் தெரியவில்லை; எதிர்கட்சித் தலைவராக இருக்கும் திரு.  பழனிசாமி அவர்களுக்கும் புரியவில்லை. எங்கள் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருமான தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற நடத்திய சட்டப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் - எடப்பாடி பழனிசாமியும், சண்முகமும் வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 77-ஆவது பாராவில் “அரசு தவறு செய்து விட்டது” (The Govt has Committed Error) என்று சுட்டிக்காட்டியுள்ள மூன்று காரணங்களை மயக்கம் தெளிந்த பிறகு திரு. சண்முகம் படித்துப் பார்த்தால் - அந்தத் தவறை இழைத்தது அ.தி.மு.க. ஆட்சி என்பதும், அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள “அரசு” அ.தி.மு.க. அரசு என்பதும் தெரியவரும். இன்னும் குறிப்பாக - அவர் புகழ் மகுடம் சூட்டுகிறாரே அந்த திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் திரு. சண்முகம் போன்றோர் “கூவத்தூர்” கூட்டணி வைத்து  நடத்திய அ.தி.மு.க. ஆட்சி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த “உள் இட ஒதுக்கீடு” விவாதம் நடைபெற்றது 2012-ஆம் வருடம். அப்போதிருந்தது யார் ஆட்சி? அவர் இப்போது சொல்கிறாரே “எங்கள் அம்மா” என்று - அந்த அம்மாவின் ஆட்சி. அந்த ஆணையத்தில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்தபோது - அந்த ஆணையத்தில் உள்ள 7 உறுப்பினர்களில் (தலைவர் உள்பட) 6 பேர் எதிர்த்தார்களே அது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சி. அந்த 6 பேரும் என்ன சொல்லி எதிர்த்தார்கள்? “எங்களுக்குச் சாதி அடிப்படையிலான புள்ளிவிவரங்களைக் கொடுக்காமல் எப்படி பரிந்துரை கொடுப்பது” என்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளித்து - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து உரிய தரவுகளுடன் ஒருமனதாக ஒரு பரிந்துரையைப் பெறாமல் தூங்கியது - கோட்டை விட்டது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சிதான். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக- அவசர அவசரமாக “ஒருமனதான பரிந்துரையைப் பெறாமல் அறிக்கை பெற்றது அ.தி.மு.க. ஆட்சியா இல்லையா?

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் இந்த அறிக்கை 24.5.2012-ல் கொடுக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையை 8 ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது யாருடைய ஆட்சி. அதுவும் அ.தி.மு.க. ஆட்சிதான். இதை இவர்களால் மறைக்க முடியுமா - அல்லது “அ.தி.மு.க. ஆட்சியே 2012 முதல் 2021 பிப்ரவரி மாதம் இந்தச் சட்டம் வரும் வரை நடக்கவே இல்லை” என்று வாதிடப் போகிறார்களா? தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அப்போதே முடக்கி வைத்து விட்டு - 2020-ல் மறுபடியும் திருத்தி அமைத்தது யாருடைய ஆட்சி? அது திரு. பழனிசாமி - சி.வி. சண்முகம் எல்லாம் “கூவத்தூரில்” பேரம் நடத்திய; கூத்து நடத்திய இவர்கள் ஆட்சிதானே! பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும் 8 ஆண்டு முடக்கி வைத்து விட்டு- 2021 சட்டமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக – அவசர கோலத்தில்- அள்ளித் தெளித்து ஒரு உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி- இன்றைக்கு இந்த அளவிற்கு அந்தச் சமுதாயத்தை நெருக்கடிக்கு கொண்டு வந்து நிறுத்தியது யார்? எடப்பாடி பழனிசாமிக்கு இந்த வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மனதளவில் உடன்பாடு இல்லை. அதே போல் சட்ட அமைச்சர் என்ற முறையில் வன்னியர் சமுதாய இடஒதுக்கீட்டை முறைப்படி கொண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் சி.வி.சண்முகத்திற்கு இருந்ததில்லை. ஆகவே வன்னியர் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அலட்சியமாகச் செயல்பட்ட இந்த இரட்டையர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

2012-லேயே “சாதி வாரியான புள்ளிவிவரங்கள் தேவை” எனப் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் - எட்டு வருடம் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருந்ததும் அதிமுக ஆட்சிதான். அதில் சட்ட அமைச்சராக இருந்தவர்தான் இப்போது “மைக்” கிடைத்தவுடன் உளறிக் கொண்டிருக்கும் திரு. சண்முகம். ஆட்சியை விட்டுப் போகின்ற நேரத்தில் – அதுவும் “ஒரு பக்கம் உள் இட ஒதுக்கீடு கொடுக்க சட்டம்”- இன்னொரு பக்கம் “ஜாதி அடிப்படையில் தகவல் சேகரிக்க நீதியரசர் குலசேகரன் ஆணையம்” இரண்டையும் அமைத்துக் குழப்பியது திரு எடப்பாடி பழனிசாமிதான்! இந்த நீதியரசர் குலசேகரன் ஆணையத்தை 2012-ல் உடனே நியமிக்க யார் தடையாக இருந்தார்கள்- அப்போது சண்முகம் அதிமுகவில் இருந்தாரா அல்லது அந்தமான் தீவுகளில் இருந்தாரா? திரு. எடப்பாடி பழனிசாமி 2017-ல் முதலமைச்சரானார். அன்றிலிருந்து 2020 வரை என்ன செய்து கொண்டிருந்தார்? கலெக்ஷனில் காட்டிய அக்கறையை வன்னியர் சமுதாயத்தின் இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் காட்டியிருக்கலாமே?

தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து நடத்தப்பட்ட அவசர செயற்குழுவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய பா.ம.க. வழக்கறிஞர் திரு. பாலு அவர்களும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எப்படி தமிழ்நாடு அரசு - குறிப்பாக எங்கள் கழகத் தலைவர் தளபதி அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட பாடுபட்டுள்ளார்கள் என்று மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ - நேற்று வரை அமைதி காத்த திரு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பொறுக்கவில்லை. பொறாமைத் தீயில் வெந்து நொந்து போய் திமுக ஆட்சி மீது பழி போடுகிறார். தனது தவறு உச்சநீதிமன்றத்தில் தோலுரிக்கப்பட்டு விட்டதே என்று திமுக மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் - அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளையும் கூட- வன்னியர் சமுதாய நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப் போராட்டம் நடத்தி - இந்த உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த 7 கருத்துக்களில் 6 கருத்துக்கள் சரியல்ல என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் இப்போது அளித்துள்ளது. அது எங்கள் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் திறமையான சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. ஆனால் அதிமுக ஆட்சியில் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து முறையான தரவுகளுடன் பரிந்துரை பெறுவதில் நிகழ்ந்த தவறுகளும், குளறுபடிகளும், சண்முகம் போன்ற “உதவாக்கரை” சட்ட அமைச்சராக இருந்தவரின் அலட்சியமும் – தேர்தலுக்காக “வேண்டா வெறுப்பாக” திரு. எடப்பாடி பழனிசாமி அளித்த இட ஒதுக்கீடுமே இந்தச் சமுதாயம் வருந்தத்தக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இதுதான் உண்மை.

பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு அதிக விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி - அதில் வன்னியர் சமுதாயம் பயன்பெறும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் வளர்ச்சியை, பட்டியலின- பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தை சமூகநீதி மூலம் அழகு பார்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்தி - சமூகநீதியில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கியவர். அவர் வழியில் வந்துள்ள எங்கள் கழகத் தலைவர் - முதலமைச்சர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திரு. பழனிசாமி, திரு. சண்முகம் போன்றவர்கள் சமூகநீதி பற்றி வகுப்பு எடுக்க வேண்டாம். “போராட்டம் இன்றி இட ஒதுக்கீடு கிடைக்கும். தம்பி ஸ்டாலின் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் கூறியிருக்கிறார். எங்கள் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதி அவர்களின் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கும். நிச்சயம் வன்னியர் சமுதாயம் போற்றும் நல்ல முடிவினை உரிய நேரத்தில் எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 27 மே, 2021

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது.- நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன்



மேகதாது அணை திட்டம் பற்றிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 21.5.2021 தேதியிட்ட ஆணை குறித்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் விளக்கம்

15.4.2021-ஆம் நாளிட்ட Times of India நாளேட்டில். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ஆரம்பகட்டப் பணிகளான சாலை அமைத்தல், கட்டுமானப் பொருட்களை சேகரித்தல் போன்ற வேலைகள் நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.

செவ்வாய், 25 மே, 2021

பருவமழை காலங்களில் வெள்ள நீர் வீணாகாமல் கடலில் கலப்பதைத் தடுத்து முறையாக குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்திடவும், கள ஆய்வு செய்ய அமைச்சர் திரு.துரைமுருகன் அறிவுரை

நீர்பாசனத் திட்டங்கள் குறித்து மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் உயர் அலுவலர்களுடன் ஆய்வு!

மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தலைமையில் அன்று (24.05.2021) தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதல் நாளான இன்று மதுரை மண்டலம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

புதன், 12 மே, 2021

"புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? மூன்று நியமன MLA-களை நியமித்தது கண்டனத்துக்கு உரியது" - திரு. துரைமுருகன்.

 "புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா?

மூன்று நியமன MLA-களை நியமித்தது கண்டனத்துக்கு உரியது"

-  திரு. துரைமுருகன்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து - அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

வியாழன், 8 ஏப்ரல், 2021

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அவசர அவசரமாக அறிவித்திருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல; புதிய அரசு அமைந்தபிறகு நிரப்பினால் இமயமலை இரண்டாக பிளந்து விடுமா? - திரு.துரைமுருகன் MLA


 "பல்கலைக்கழக துணை வேந்தர்களை அவசர அவசரமாக அறிவித்திருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல;

புதிய அரசு அமைந்தபிறகு நிரப்பினால் இமயமலை இரண்டாக பிளந்து விடுமா?"

-  திமுக பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் MLA அவர்கள் அறிக்கை.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் 6.4.2021 அன்று தான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மன்றத்திற்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது.

26.4.2021 அன்று வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றுயிருக்கும். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாதம் காலம் எந்த முடிவு எடுக்காமல் இருப்பது தான் மரபு.

புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்க போகும் துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

1.         காந்திராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக

எஸ். மாதேஸ்வரன்,

2.         கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார்

இவை இரண்டும் ஆளுநர் அறிவித்ததாக செய்தித்தாள்களில் வெளிவந்த அறிவுப்புகள்.

பல நாட்களாக நிரப்படாமல் இருந்த இந்த பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும். இந்த இரண்டு போதாது என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது.

தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவைகள். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்க கூடாது என்பதுதான் எமது கேள்வி.

முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னை பல்கலைக் கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்து காட்டி இருக்கிறது. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்கு கொண்டு செல்லட்டும்.

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!


வியாழன், 11 பிப்ரவரி, 2021

காவேரி - குண்டாறு திட்டத்தை, 'பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைப்பார்' என பழனிசாமி ஏமாற்றினால் – பிரதமர் ஏமாறலாமா? - திரு. துரைமுருகன்


 ”கலைஞர் அவர்களால் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு – நடைமுறைப்படுத்தப்பட்ட காவேரி - குண்டாறு திட்டத்தை, 'பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைப்பார்' என பழனிசாமி ஏமாற்றினால் – பிரதமர் ஏமாறலாமா?” - திரு. துரைமுருகன் அவர்கள் அறிக்கை.

வேறு மாநிலங்களில் ஒடும் ஆற்றின் மிகை நீரை அண்டை மாநிலங்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது குறித்துதான், பல அரசியல் தலைவர்களும் - நீரியல் நிபுணர்களும் பல காலமாக பேசிக் கொண்டு வருகிறார்கள்.  இந்த கருத்தோட்டம் ஓர் தொடர் கதையாக போய்க் கொண்டிருக்கிறது.

புதன், 16 டிசம்பர், 2020

“நான் OBC” என்று கூறிய பிரதமர் - நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பைக் குழப்பவாதிகளிடமிருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.- துரைமுருகன் MLA


 "IIT ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்கும் பரிந்துரையை குப்பைத்தொட்டியில் வீசி விட்டு - IIT & மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5% இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்"

-  திரு. துரைமுருகன் MLA அறிக்கை.

“ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும்” என்றும், “ஐ.ஐ.டி. நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும்” என்றும் மத்திய கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரைக்கு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 30 நவம்பர், 2020

ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும்; செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பிலேயே அலட்சியம் காட்டும் அதிமுக அரசு மாநிலத்தின் பிற ஏரிகளை எப்படி பராமரிக்கும்? - திரு. துரைமுருகன் MLA.


 "ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும்; செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பிலேயே அலட்சியம் காட்டும் அதிமுக அரசு மாநிலத்தின் பிற ஏரிகளை எப்படி பராமரிக்கும்?"

 - திரு. துரைமுருகன் MLA.

'நிவர்' புயலை முன்னிட்டு - செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3 ஆவது மதகுகள்,  மூடமுடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் 'ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா' என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.- திரு. துரைமுருகன் MLA

 "பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் 'ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா' என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்" - திரு. துரைமுருகன் MLA 

பழம்பெரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் வரும் ஆறு கல்லூரிகளில் தகுதியில்லாதவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகிறது. 

மறைந்த பேராசிரியர் பெருந்தகை, என்.வி.என். சோமு, முரசொலி மாறன், நான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும், நீதிபதிகளும் படித்த புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில்;