தெய்விகத் தமிழ்ப் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்விகத் தமிழ்ப் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 பிப்ரவரி, 2021

விராலிமலை முருகன் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!

விராலிமலை முருகன் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் - விராலிமலையிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு வரும் 25.02.2021 அன்று நடைபெறவுள்ளது. இக்குடமுழுக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கிணங்க கருவறை - கலசம் - யாகசாலை ஆகிய மூன்று முகாமையான நிலைகளிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டுமென “தெய்விகத் தமிழ்ப் பேரவை” கோரிக்கை விடுத்து வருகிறது.