ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பக்ரீத். இப்படத்தை ஜெகதீசன்சுபு இயக்கம் மற்றும் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இதில் விக்ராந்த் , வசுந்தரா, ரோகித் பதாக் மற்றும் 3 ஒட்டகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எம்10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதில், விக்ராந்த் வசுந்தரா, சுபு.ஜெகதீசன், டி.இமான் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
விக்ராந்த் கூறுகையில், நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு.
