கல்யாணியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் எம்பிபிஎஸ் 2021ஆம் ஆண்டு வகுப்புத் தொடக்க விழாவில் காணொலி காட்சி வாயிலாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைஅமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை வகித்தார்.
125 எம்பிபிஎஸ் மாணவர்களுடன் 2021-ஆம் ஆண்டு 3-வது கல்வியாண்டை தொடங்கும் கல்யாணி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மாணவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துத் தெரிவித்ததுடன் தமது மகிழ்ச்சியையம் மத்திய இணை அமைச்சர் வெளிப்படுத்தினார்.



