விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ஷகீத் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நாளை (ஜூன் 11) சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரில், ஷகீத் உதயன் என்ற இடத்தில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இத்துறையின் இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கலந்து கொண்டு ஷகீத் ராம் பிரசாத் பிஸ்மில், ஷகீத் அஷ்பக் உல்லா கான், ஷகீத் ரோஷன் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.