பிஸ்வாஜித் தாஸ்குப்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஸ்வாஜித் தாஸ்குப்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூன், 2020

கிழக்குக் கடற்படைக்குப் புதிய தலைமை அதிகாரி பொறுப்பேற்றார் துணை கடற்படை அதிகாரி பிஸ்வாஜித் தாஸ்குப்தா


துணை கடற்படை அதிகாரி பிஸ்வாஜித் தாஸ்குப்தா, AVSM, YSM, VSM விசாகப்பட்டினத்தின் கிழக்குக் கடற்படைத் தலைமை அதிகாரியாக  ஜூன் 12, 20 வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். முன்னர் துணை கடற்படை அதிகாரியாக இருந்த எஸ்.என். கோர்மட், புது தில்லி, பாதுகாப்பு அமைச்சகத்தின் (கடற்படை) ஒருங்கிணைந்த தலைமையகத்தில் கட்டுப்பாட்டுப் பணியாளர் சேவைக்கு மாற்றப்பட்டார்.

துணை கடற்படை அதிகாரி பிஸ்வாஜித் தாஸ்குப்தா, தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். 1985ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் நியமிக்கப்பட்ட அவர் Navigation and direction துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஏவுகணை தாங்கிய ஐ.என்.எஸ் நிஷாங்க், ஐ.என்.எஸ் கர்முக், போர் கப்பல் ஐ.என்.எஸ் தபார் மற்றும் விமானம் தாங்கி ஐ.என்.எஸ் விராட் உள்ளிட்ட நான்கு முன்னணி கப்பல்களுக்கு அவர் தளபதியாக இருந்துள்ளார்.