அமைப்பு சாரா தொழலாளர்களுக்காக இ-ஷ்ரம் இணையதளம் தொடங்கப்பட்டு 2 மாதத்துக்குள் 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இத்தகவலை சுட்டுரையில் பகிர்ந்து கொண்ட மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், கூறுகையில், இதில் பதிவு செய்வதன் மூலம், அரசு திட்டங்களின் பயன்களை, அமைப்பு சாரா தொழிலாளர்கள் எளிதில் பெற முடியும் என்றார்.
கட்டுமானம், ஆடை தயாரிப்பு, மீன்பிடித் தொழில், நடைபாதை வியாபாரிகள், தெரு வியாபாரிகள், வீட்டு வேலை செய்வோர், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துணை தொழில்களில் ஈடுபடுவோர், போக்குவரத்து துறையில் உள்ளவர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
