மகேந்திரபாய் முன்சபாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகேந்திரபாய் முன்சபாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜூலை, 2021

கொவிட்-19 அறிகுறிகள் உள்ளவர்களை குணப்படுத்துவதற்கான செயல்திறன் மிக்க ஆயுஷ் மருந்துகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.- ஆயுஷ் இணை அமைச்சர் திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஆயுஷ் இணை அமைச்சர் திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு, எய்ம்ஸ் மற்றும் ஆயுஷ் அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகளைக் கொண்ட ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பல்துறை பணிக்குழுவை ஆயுஷ் அமைச்சகம் அமைத்துள்ளது.

செவ்வாய், 20 ஜூலை, 2021

18 ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு WHO-GMP/COPP சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.- ஆயுஷ் இணையமைச்சர் திரு மகேந்திரபாய் முன்சபாரா


 ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருந்துகள் நிறுவனம் (IMPCL), 18 ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு, WHO-GMP/COPP சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை இந்திய மருந்து தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலகம், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு(CDSCO), உத்தரகாண்ட் மாநில உரிமம் ஆணையம் அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்தனர். இந்த கூட்டு ஆய்வு குழுவின் முடிவுகள் ஐஎம்பிசிஎல் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு WHO-GMP/COPP சான்றிதழை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு உகந்த வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுடன் வழங்கலாம்.