ரமேஷ் பொக்ரியால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரமேஷ் பொக்ரியால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஜூலை, 2021

அனைத்து குழந்தைகளும் புரிந்துகொண்டு படிக்கும் திறன் மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டத்தை (நிபுண் பாரத்) மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' தொடங்கி வைத்தார்.


 மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்து மற்றும் எண்ணறிவு பெறுவதை 2026-27-க்குள் உறுதி செய்வதற்கான புரிந்துகொண்டு படிக்கும் திறன் மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டத்தை (நிபுண் பாரத்) மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

செவ்வாய், 8 ஜூன், 2021

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மின்னணுத் தகவல்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு, மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்' ஒப்புதல் அளித்துள்ளார்.


 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மின்னணுத் தகவல்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு, மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்' ஒப்புதல் அளித்துள்ளார்.

மின்னணு/ இணையதளம்/ ஒளிபரப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு 2020 மே 17-ஆம் தேதி பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான முன்முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சி, குறிப்பாக, மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கான சிறப்பு மின்னணுத் தகவல்களை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.‌ இந்தத் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கான மின்னணுத் தகவல்களை வடிவமைப்பதற்கு வழிகாட்டுதல்களை பரிந்துரைப்பதற்கான நிபுணர் குழுவை அமைத்தது.

வியாழன், 3 ஜூன், 2021

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் செல்லுபடித் தன்மையை 7 ஆண்டுகளிலிருந்து ஆயுள்காலம் முழுவதும் நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு.- திரு.ரமேஷ் பொக்ரியால்


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் செல்லுபடித் தன்மையை 7 ஆண்டுகளிலிருந்து ஆயுள்காலம் முழுவதும் நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அறிவித்துள்ளார்.

புதன், 2 டிசம்பர், 2020

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசித்துதான் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.- மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்

 


இந்திய அரசியலமைப்பில் உள்ளபடி,  இட ஒதுக்கீடு கொள்கையை, தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது என மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

செவ்வாய், 20 அக்டோபர், 2020

அனுபவ ரீதியான கல்வியை வழங்குவதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம்: டாக்டர் ரமேஷ் பொக்ரியால்


 சுவாமி விவேகானந்தர் நம் மரணம் வரை நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம், அனுபவம் வாய்ந்த உலகமே சிறந்த ஆசிரியர் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். 'சுவாமி விவேகானந்தரின் கல்வி பார்வை மற்றும் தேசிய கல்வி கொள்கை 2020' குறித்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்.கே.எம்.வேரி) ஏற்பாடு செய்துள்ள வெபினாரில் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' இதை இன்று தெரிவித்தார். விஞ்ஞானம் மற்றும் கலை பற்றிய அறிவைப் பெறுவதற்காக நாலந்தா மற்றும் டாக்ஸிலா (டாக்ஸிலா) போன்ற பல்கலைக்கழகங்களுக்கு நாட்டு மற்றும் உலக மாணவர்கள் வந்த ஒரு காலம் இருந்தது என்று அவர் கூறினார். 

ஞாயிறு, 21 ஜூன், 2020

இனி தங்கள் அலைபேசி மூலமாகவே JEE, NEET மாதிரிப் போட்டித் தேர்வுகளை ஹிந்தி மொழியிலேயே பயிற்சி செய்து கொள்ள முடியும். - ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்


தேசியத் தேர்வுப் பயிற்சி அலைபேசிச் செயலியில் ஹிந்தி மொழியில் மாதிரித் தேர்வுகளை எழுதுவதற்கான அம்சங்களை தேசியத் தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது

தேசியத் தேர்வுகள் முகமை (National Testing Agency - NTA), தேசியத் தேர்வுப் பயிற்சி அலைபேசி செயலியில் ஹிந்தி மொழியிலான தேர்வுகளையும் நடத்தத் துவங்கியுள்ளது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று அறிவித்தார். போட்டித் தேர்வுகளை ஹிந்தி மொழியில் எழுதும் மாணவர்கள், இனி தங்கள் அலைபேசி மூலமாகவே தேசியத் தேர்வுப் பயிற்சி அலைபேசி செயலியில் அளிக்கப்படும் மாதிரிப் போட்டித் தேர்வுகளை ஹிந்தி மொழியிலேயே பயிற்சி செய்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார். 

சனி, 6 ஜூன், 2020

’கொவிட்-19 சூழலில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’’ என்னும் விழிப்புணர்வை அதிகரிக்கும் தகவல் கையேட்டை ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார்.


’கொவிட்-19 சூழலில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’’ என்னும் விழிப்புணர்வை அதிகரிக்கும் தகவல் கையேட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் மூலம் பாதுகாப்பான கல்வி கற்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே அதிகரிக்கும் வகையில், ‘’ கொவிட்-19 காலகட்டத்தில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’’ என்னும் தலைப்பிலான தகவல் கையேட்டை புதுதில்லியில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார்.  இந்தக் கையேட்டை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) மற்றும் யுனெஸ்கோவின் புதுதில்லி அலுவலகம் உருவாக்கியுள்ளன. இந்தக் கையேடு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஆன்லைன் அடிப்படையான எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைப் போதிக்கும். இது பெற்றோருக்கும், கல்வி கற்பிப்பவர்களுக்கும் குழந்தைகள் எவ்வாறு இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதைக் கற்பிக்க உதவும்.

வியாழன், 4 ஜூன், 2020

" துலிப் (TULIP) திட்டம் " பிரதமர் திரு. நரேந்திர மோடியின் லட்சியத்தோடு இந்தத் திட்டம் ஒத்திருப்பதாகத் தெரிவித்தார். - ரமேஷ் பொக்ரியால்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் துலிப் என்னும் பயிற்சித் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சரும், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சரும் இணைந்து தில்லியில் இன்று துவக்கி வைத்தனர்.

சமீபத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு துலிப் (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் முன்மாதிரியானத் திட்டத்தை நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், பொலிவுறு நகரங்களிலும் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர், திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), திரு. ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இணைந்து இன்று துவக்கி வைத்தனர். இந்தத் திட்டத்துக்கான இணையதளத்தையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர், திரு. அம்ரித் காரே; வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர், திரு. துர்கா ஷங்கர் மிஸ்ரா, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர், திரு. அனில் சகஸ்ரபுத்தே மற்றும் இரு அமைச்சகங்கள் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய திரு. பொக்ரியால், நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்த வேண்டும் என்னும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் லட்சியத்தோடு இந்தத் திட்டம் ஒத்திருப்பதாகத் தெரிவித்தார். நமது மாணவர்களுக்கு செய்முறை அனுபவத்தை அளித்து,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களின் செயல்பாட்டில் புதிய யோசனைகளையும், புதுமையான எண்ணங்களையும் புகுத்த துலிப் திட்டம் ஒரு கருவியாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். 

புதன், 3 ஜூன், 2020

மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII) மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்


மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII) மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” இன்று புதுதில்லியில் மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII)   மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை வெளியிட்டார்.  கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலில் அவர்களின் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுவதற்கு உதவும் வகையில் இந்தக் காலஅட்டவணையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் - என்சிஇஆர்டி உருவாக்கியுள்ளது.  மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட இந்த அட்டவணையானது உதவும்.

இந்தக் காலஅட்டவணையை வெளியிட்டு உரையாற்றிய போது மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வேடிக்கையாகவும் ஆர்வத்துடனும் கல்வி கற்பதற்காகக் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சமூக ஊடக உபகரணங்களை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவது என்ற வழிகாட்டுதல்களைத் தரும் என்றும் இவற்றை வீட்டில் இருந்தபடியே மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.  எனினும், பல்வேறுபட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பிளாட்ஃபார்ம்களை – அதாவது மொபைல், வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்தி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அணுகிப் பயன்படுவத்துவது என்பது ஒரே நிலையில் இல்லாமல் வேறுபட்டு இருக்கும் என்ற யதார்த்த நிலையையும் இந்த அட்டவணையானது கவனத்தில் கொண்டுள்ளது.