வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூலை, 2021

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.


 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலைத்துறையின் முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.

இந்திய வானிலைத்துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அசாம் மற்றும் மேகாலயாவில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை கனமழை முதல் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்,  பீகார், அருணாச்சலப் பிரதேசம், கேரளா , மாஹே, மேற்கு வங்கம் , சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

புதன், 9 ஜூன், 2021

செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் புயலை கண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


 செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் புயலை கண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புயலை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  உயிர்சேதம் மற்றும் பொருள் சேதத்தை தவிர்க்க முடியும்.

இதுவரை, தொலை உணர்வுசெயற்கை கோள்கள் மூலம் புயுல் உருவாவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு வந்தது. வெப்பமான கடலின் மேல் பரப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்பே, செயற்கைகோள் படங்கள் மூலம் இவற்றை அறிய முடியும். இந்த கண்டுபிடிப்புக்கும், புயல் தாக்குவதற்கும் அதிக இடைவெளி இருப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

ஞாயிறு, 23 மே, 2021

யாஸ் புயலினால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக 16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன.

 


வருகின்ற மே 26-ஆம் தேதி கிழக்கு கடற்கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் யாஸ் புயலினால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக ஆயுதப்படைகள் முழுவீச்சில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.‌ மே 23-ஆம் தேதி வரை இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் 70 டன் சரக்குகளையும் ஜாம்நகர், வாரணாசி, பாட்னா மற்றும் அரக்கோணத்திலிருந்து கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் போர்ட் பிளேயருக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

யாஸ் புயல், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படையின், கப்பல்கள், விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

யாஸ் புயலை முன்னிட்டு, இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யாஸ் புயல், கிழக்கு கடலோர பகுதியை மே 26ம் தேதி தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கடலோர காவல் படை மையங்கள் அனைத்தும் விழிப்புடன் உள்ளன. வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படையின், கப்பல்கள், விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்திய கடலோர காவல்படையின் தொலைதூர மையங்கள், வானிலை குறித்த எச்சரிக்கைகளை உள்ளூர் மொழியில் எம்எம்பி ரேடியோ மூலம் கடற் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் ஒலிபரப்பி வருகிறது. வங்க கடல் பகுதியில் நுழையும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்க சர்வதேச பாதுகாப்பு வலைதளமும் செயல்படுத்தப்பட்டு ‘நேவ்டெக்ஸ்’ எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.


வங்க கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதி மற்றும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் கடலோர பகுதிகளிலும், நாள் ஒன்றுக்கு  16 கப்பல்களையும், 3 விமானங்களையும் இந்திய கடலோர காவல்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

மேலும், கடலோர காவல் படையின் 31 பேரிடர் மீட்பு குழுக்கள் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் தயார்நிலையில் உள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், தற்போது வரை, 254 படகுகள் பாதுகாப்பாக கரை திரும்புவதை இந்திய கடலோர காவல் படை உறுதி செய்துள்ளது. மேலும் 77 வர்த்தக கப்பல்கள், நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்களுக்கும் இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஞாயிறு, 16 மே, 2021

டவ்-தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, குஜராத்தில் 18ம் தேதி காலை கரையை கடக்கும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னிறிவிப்பு.

 


டவ்-தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, குஜராத்தில் 18ம் தேதி காலை கரையை கடக்கும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னிறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயல் டவ்-தே, கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு நோக்கி மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணியளவில் கிழக்கு மத்திய அரபிக் கடலில் பஞ்சிம் கோவுக்கு மேற்கு -தென்மேற்கு திசையில் 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.  

சனி, 16 மே, 2020

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். அது மேலும் வலுவடைந்து சூறாவளி புயலாக உருவெடுக்கக் கூடும்




வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். அது மேலும் வலுவடைந்து சூறாவளி புயலாக உருவெடுக்கக் கூடும். மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் சூறாவளிக்கு முந்தைய கண்காணிப்பு

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சூறாவளி எச்சரிக்கைப் பிரிவு இன்று கூறியுள்ளதாவது:

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இன்று (2020, 16 மே அன்று) காலை ஐந்தரை மணிக்கு அட்சரேகை 10.4°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.0°டிகிரி கிழக்கில், பாராதீப்பிற்குத் (ஒடிசா) தெற்கே சுமார் 1100 கிலோ மீட்டர் தொலைவிலும்;  திகாவுக்கு (மேற்குவங்கம்) தெற்கே 1250 கிலோமீட்டர் தொலைவிலும்; கெப்புபராவிற்கு (பங்களாதேஷ்) தெற்கு-தென்மேற்கு திசையில் 1330 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது விரைவாக மேலும் வலுவடைந்து இன்று மாலையோ சூறாவளிப் அல்லது அடுத்த 24 மணி நேரத்திலோ கடும் சூறாவளிப் புயலாக உருவெடுக்கக் கூடும். 2020, மே17 வரையிலும் முதலில், வடக்கு வடமேற்கு முகமாக நகர்ந்து, மீண்டும் வங்காள விரிகுடாவில் வடமேற்கு திசையில் வடக்கு வடகிழக்கு முகமாகத் திரும்பி, 2020, மே18 முதல் 20  வரை மேற்கு  வங்கக் கடற்கரை நோக்கி நகரக் கூடும்.

ஒடிசா கடற்கரைப் பகுதிகளில்  மே 18 மாலை முதல் ஆங்காங்கே சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020,  மே19 அன்று ஒரு சில இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். 2020, மே 20  அன்று வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும்.

கங்கை நதி பாயும் மேற்குவங்கப்பகுதிகளில்  2020, மே19 அன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான, வெகு பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020, மே 20  அன்று சிற்சில பகுதிகளில் ஆங்காங்கே வெகு பலத்த மழை பெய்யக்கூடும்.