வி கே சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வி கே சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஆகஸ்ட், 2021

விமான போக்குவரத்துத் துறையில் இயக்கக் கட்டணத்தை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங் தகவல்


 சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்கக் கட்டணத்தை எதிர்கொள்வதற்காக அரசு மேற்கொண்டு வரும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒரு சில பின்வருமாறு:

•        பல்வேறு கொள்கை நடவடிக்கைகளின் மூலம் விமான நிறுவனங்களுக்கு ஆதரவு.

•        இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் தனியார் துறையினர் வாயிலாக விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.

•        தற்போது இயங்கும் மற்றும் புதிய விமான நிலையங்களில் பொது-தனியார் கூட்டணி முயற்சியில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பது.

•        எரிவாயு பயன்பாட்டைக் குறைக்கவும், குறைந்த நேரத்தில் பயணிக்கும் வழிகளைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

•        உள்நாட்டு பராமரிப்பு சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18%லிருந்து 5%ஆகக் குறைப்பு.