விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 நவம்பர், 2021

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . - திரு.விஜயகாந்த்


 சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . - திரு.விஜயகாந்த்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து  வருகிறது. குறிப்பாக சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. இதனால் தாழ்வான சாலைகள் அனைத்தும் குளம் போல்  காட்சியளிக்கின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும். - திரு. விஜயகாந்த்


 வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.                                                                                                                                                                     மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.