ஸ்ரீபாத் யஸோ நாயக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீபாத் யஸோ நாயக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூலை, 2020

வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் யஸோ நாயக் தொடங்கி வைத்தார்.


'இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் 'தற்சார்புள்ள இந்தியா' இயக்கங்களை மேம்படுத்த இந்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் கீழ், இந்தியப் பாதுகாப்பு மற்றும் வான்வெளித் தொழில்கள், மாற்றத்தின் தொடக்கத்தில் உள்ளதாக மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் யஸோ நாயக் கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த 5-வது மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். இந்த மாநாட்டின் மையக் கருத்து 'தற்சார்புள்ள இந்தியா இயக்கத்துடன் இணைந்து இந்தியாவுக்கு அதிகாரமளித்தல்' என்பதாகும்.