விநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள்படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்த சக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம்.
நாம் எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை மனதார நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும். ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

