சென்னை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்திற்கான காரணத்தை கேட்டபோது "அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார்.
முதல்வரே அதற்கு தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து ரெய்டு நடத்திக்கலாம். விசாரணை கமிஷன் நியமிக்கலாம் உங்கள் பழிவாங்கும் நடவடிக்கை பிறகு பார்க்கலாம். நீங்கள் கூறிய கருத்து உங்கள் கட்சிகாரர்கள் திருப்தி அடைய வேண்டுமானால் பயன்படும்.
இப்பொழுது மக்களை மழை வெள்ளத்தில் இருந்து விரைவில் காப்பாற்றும் வழியை பாருங்கள். மழை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது என்றீர்கள்.