வியாழன், 4 ஜூலை, 2019

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும்! - வைகோ

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்
தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும்!

- வைகோ கோரிக்கை
(மதிமுக பொதுச்செயலாளர்)


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வது பற்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய் அவர்களின் விருப்பம் குறித்து வெளிவந்துள்ள செய்தியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற சட்ட வல்லுநர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கருத்து

திங்கள், 1 ஜூலை, 2019

புதுவை ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும்! - வைகோ

புதுவை ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும்!

- வைகோ அறிக்கை
(மதிமுக பொதுச்செயலாளர்,)

தண்ணீர் பிரச்சினையில் தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக மக்களைக் இழிவுபடுத்துகின்ற வகையில், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் கருத்துத் தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் ஆகும்.

தமிழக மக்களைப் பொறுப்பு அற்றவர்களாகச் சித்தரிக்க முனைகின்ற கிரண் பேடியின் ஆணவப் போக்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தில்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுத் தோல்வி அடைந்த கிரண் பேடி அவர்கள், புதுவை ஆளுநராகப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், தாமே ஆட்சியாளர் போலச் செயல்பட்டு வருகின்றார்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசு நிர்வாகத்தை முடக்கியதுடன், முதல்வரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் துச்சமாகக் கருதிச் செயல்பட்டு வருகின்றார். மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் பதவி விலகி இருக்க வேண்டிய கிரண் பேடி அவர்கள், இன்னமும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது, அவரது பதவிப்பித்தைக் காட்டுகின்றது.

கடந்த 3 ஆண்டுகளாக, புதுவை அரசைத் திட்டமிட்டு முடக்கி வருகின்ற, மக்களை மதிக்காத கிரண் பேடி உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அல்லது, அவரைப் பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


தமிழக பட்ஜெட் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்! - மருத்துவர் ராமதாஸ்

நிதிநிலை அறிக்கை: மக்களின் நீண்டநாள்
எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்!
- மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
(பாமக நிறுவனர்)


மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பின்னர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, வரும் 5-ஆம் தேதி திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை

"பக்ரீத் " இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை.இனியும் வராது. - நடிகர் விக்ராந்த்


ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பக்ரீத். இப்படத்தை ஜெகதீசன்சுபு இயக்கம் மற்றும் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இதில் விக்ராந்த் , வசுந்தரா,  ரோகித் பதாக் மற்றும் 3 ஒட்டகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எம்10 புரொடக்‌ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார். 

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதில், விக்ராந்த் வசுந்தரா,  சுபு.ஜெகதீசன், டி.இமான்  உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

விக்ராந்த் கூறுகையில், நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு.

மத்திய பாஜக அரசை அதிமுக அரசு எதிர்க்கத் துணியுமா? - மு.க.ஸ்டாலின்

'ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை', 'அகில இந்திய நீதித்துறைத் தேர்வு' போன்ற அறிவிப்புகளை  மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும்"
"மாநில சுயாட்சி கொள்கையை வலியுறுத்த மத்திய பாஜக அரசை அதிமுக அரசு எதிர்க்கத் துணியுமா?"
மு.க.ஸ்டாலின் அறிக்கை
(திமுக தலைவர் )


மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க முயலும் ஆதிக்க மேலாண்மை கொண்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதற்கே