வெள்ளி, 5 ஜூலை, 2019

நிதிநிலை அறிக்கையில், மாற்றத்திற்கான அறிகுறிகள் இல்லை! - வைகோ

நிதிநிலை அறிக்கையில்,
மாற்றத்திற்கான அறிகுறிகள் இல்லை!
- வைகோ அறிக்கை
(மதிமுக பொதுச்செயலாளர்)

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2019-2020-க்கான வரவு செலவுத் திட்டம், புதிய இந்தியாவுக்கான துவக்கம்; நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 இலட்சம் கோடி டாலராக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கான அறிகுறிகள் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படவில்லை. பொருளாதார ஆய்வு அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஐந்து ட்ரில்லியன் டாலர்

சமஸ்கிருதம் - இந்திக்கு முன்னுரிமை; தமிழுக்குக் கடைநிலையா? - கி.வீரமணி

உச்சநீதிமன்றத் தீர்ப்பு - தமிழிலும் வெளிவருவது வரவேற்கத்தக்கது!

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும், செம்மொழி நிறுவனம் சிதைக்கப்பட்டு வருவது ஏன்?

சமஸ்கிருதம் - இந்திக்கு முன்னுரிமை; தமிழுக்குக் கடைநிலையா?

- ஆசிரியர் கி.வீரமணி 
(தலைவர் திராவிடர் கழகம்)



உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது என்ற ஓர் அறிவிப்பு நேற்று வெளி வந்தது. அந்த அறிவிப்பில் உலகில் மூத்த மொழிக்குச் சொந்தக்காரர்களான தமிழ் நாட்டு மக்கள் - அவ்வாறு வெளியிடப்பட்ட மொழிகளின் பட்டியலில் தமிழ்

வியாழன், 4 ஜூலை, 2019

10% இடஒதுக்கீடு வழங்கிட முதல்வருக்கு டாக்டர்.K.கிருஷ்ணசாமி கடிதம்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

டாக்டர்.K.கிருஷ்ணசாமி கடிதம்
(புதிய தமிழகம்)


இந்தியா முழுமைக்குமுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புக்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கிட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஏற்கெனவே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கிவிட்டது. பல உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வும் துவங்கவுள்ளது.

ஏற்கெனவே பல மாநிலங்கள் மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு திட்டத்தை வரவேற்று நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டன. ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரையிலும், இது குறித்து தனது முடிவை அறிவிக்கவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட பிரிவினருக்கான இழப்பீட்டை சரிசெய்யும் வகையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் 10% இடங்களை கூடுதலாகக் கொடுப்பது குறித்து மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது.

குறிப்பாக, இப்பொழுது இருக்கக்கூடிய மொத்த இடங்களைக் காட்டிலும் மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 25% கூடுதலான இடங்களை அளிப்பதற்கும் மத்திய அரசு முன் வந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், 10% சதவீதம் முற்பட்ட பிரிவினருக்குப் போக, கூடுதலாக 15% இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் பெற வாய்ப்பிருக்கிறபோதிலும், மாநில அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை? தமிழக அரசு முற்பட்ட பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முன்வருமேயானால், இந்தாண்டு மட்டும் 812 பேர் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் கூடுதலாக மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை பெறுவார்கள். அந்த வாய்ப்பை தமிழக அரசு எந்த விதத்திலும் இழந்து விடக்கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோளாகும்.

இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்டு முடிவெடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். தமிழக மக்களுடைய நலன் கருதி பல நல்ல திட்டங்களை அமல்படுத்திவரக்கூடிய நீங்கள், முற்பட்ட பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமலாக்குவதற்கு தாங்களே முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள பலரின் ஆலோசனைகள் இதற்கும் எதிராகவே இருக்கக் கூடும். ஒருவேளை நீங்கள் அரசியல் கட்சிகளுடைய ஆலோசனைகளைப் பெறுவதென முடிவெடுத்தால், தமிழகத்தினுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, விரிவான ஆலோசனைகளைப் பெற்றிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

எட்டுக் கோடி தமிழ் மக்களின் நலனை உள்ளடக்கியும், நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்கால மருத்துவர் கனவுகளை நனவாக்கக்கூடிய வகையிலும், முற்பட்ட பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமலாக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது! - மருத்துவர் ராமதாஸ்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை: 
தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது!
மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
(பாமக நிறுவனர்)

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று தமிழக சட்டம் மற்றும் கனிமவள அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்திருக்கிறார். காவிரி பாசன மாவட்டங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக

செம்மொழியாம் தமிழ்மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது - மு.க.ஸ்டாலின்

“இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது குறித்த செய்தியை 
தி.மு.கழகம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றது; 
அதேவேளையில், 
செம்மொழியாம் தமிழ்மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது”

- மு.க.ஸ்டாலின் அறிக்கை.
(தி.மு.க தலைவர் )

இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு, மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த நல்ல முயற்சியை மனதார வரவேற்கின்றேன். வழக்குகளைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்சினையின்றி - எந்தவிதக் குழப்பமும் சந்தேகமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வழக்கை நடத்திய தங்களது வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதங்களையும், எதிர்த் தரப்பின் பிரதி வாதங்களையும் நன்கு தெரிந்து புரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த முயற்சி இந்திய நீதி பரிபாலனச் சரித்திரத்தில் மிக முக்கிய மைல்கல் என்றே கருதுகின்றேன்.

இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இந்திய அரசயில் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. மேலும், தீர்ப்புகளின் மொழியாக்கத்தில், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்ததும் – முதன்மையானதும் - இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்றுச் செழுமையானதுமான செம்மொழித் தமிழை, உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத் தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழறிஞர்களுக்குப் பல்வேறு அய்யப்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். 

எனவே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களின் இந்த வரவேற்கத்தக்க சீரிய முயற்சியின் விளைவாகத் தமிழ் மொழியிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும். அந்த அரிய செயலைச் செய்து அவர் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற வேண்டுமென்று, ஏழரைக் கோடித் தமிழக மக்களும் விரும்புகிறார்கள். ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.