வியாழன், 25 ஜூன், 2020

ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்


ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்;
சுயசார்பு ஒடிசா என்ற நிலையை எட்டுவதற்கு இது ஒரு முக்கிய நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான்,  ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக்குடன் இணைந்து, பாரதீப்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ள தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

உலகிலேயே இந்தியாவில்தான் இறப்பு விகிதம் மிகக் குறைவு. கோவிட்-19 ஆல் இறப்பவர்களின் உலக சராசரி, ஒரு லட்சத்துக்கு 6.24 நபர் ஆகும். இந்தியாவில் இது ஒரு லட்சத்துக்கு 1.06 நபர் மட்டுமே.


கொவிட்-19 அண்மைத் தகவல்கள் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவுக்கு மத்தியக் குழு செல்ல உள்ளது மொத்த பரிசோதனைகள் 75 லட்சத்துக்கும் மேல்; குணமடையும் விகிதம் 57.43 விழுக்காடாக அதிகரிப்பு

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு லவ் அகர்வால் தலைமையிலான மத்தியக் குழு, 2020 ஜூன் 26 முதல் 29 வரை குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல உள்ளது. இந்தக் குழு, அம்மாநில அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, கொவிட்-19 தொற்றை நிர்வகிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தி அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.

ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம்: 26 ஜூன் 2020 அன்று பிரதமர் துவக்கி வைப்பார்


ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம்: 26 ஜூன் 2020 அன்று பிரதமர் துவக்கி வைப்பார்

கோவிட் பெருந்தொற்று தொழிலாளர்கள் அனைவரையும் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களை, வெகுவாக பாதித்துள்ளது ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதருவது; வாழ்வாதாரத்திற்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பது; ஆகியவற்றின் அவசியம் காரணமாக, கோவிட்-19 பாதிப்பை சமாளிப்பது மேலும் சவாலானது. பல்வேறு பிரிவுகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக கவனம் செலுத்தும் வகையில், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் 20 ஜூன் 2020 அன்று தொடங்கப்பட்டது. 

"துன்பத்திலும் - துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?" - மு.க.ஸ்டாலின்


"துன்பத்திலும் - துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?" -  மு.க.ஸ்டாலின் 

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. அணை திறக்கும் போதே - “காவிரி கடைமடைப் பகுதிகளுக்கும் குறுவைச் சாகுபடிக்கு  நீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்” என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருந்தேன். ஆனால் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக “பெயரளவில்” அறிவித்து - அதை மேற்பார்வையிட ஒரு “கமிட்டி”யை “பகட்டாக” அ.தி.மு.க. அரசு அமைத்ததே தவிர- உண்மையிலேயே தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவோ அல்லது முறைப்படி முழுமையாகத் தூர்வாரவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடைமடைக்குக் காவிரி நீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் கதறுவதை முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை; தனது பரிவாரங்களுடன் மேட்டூர் திறப்பைப் பெரிய விளம்பர வெளிச்சத்தில் செய்ததோடு சரி!

"எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?" - மு.க.ஸ்டாலின்


"எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?" -  மு.க.ஸ்டாலின் 

ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று  பரவாமல் தடுக்கும் பணியில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அலட்சியமாகவும் - ஆணவத்துடனும் - சுயலாப உள்நோக்கத்துடனும் செயல்பட்டுவந்தாலும், உயிர் காக்கும் மருத்துவர்கள் - செவிலியர்கள் - மருத்துவத்துறையினர் - தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இரவு பகல் பாராமல் சாலைகளில் நின்று, ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் காவல் துறையினரும், பொதுமக்களின் வணக்கத்திற்கும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அனைத்துத் தரப்பினரும் இவர்களின் பணித் திறனைப் பெரிதும் மதித்து வருகின்றனர்.