புதன், 1 ஜூலை, 2020

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. - டாக்டர் K.கிருஷ்ணசாமி


ஒரு வார காலமாக ஆயிரக்கணக்கான கிராமங்களில் கருப்பு கொடி போராட்டம்!  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!!

பட்டப்பகலில் நடைபெற்ற உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளது. கொலையின் கொடூரத்தை கணக்கிலே கொள்ளாமல் சாதி மீது இரக்கம் காட்டி முக்கிய குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு வரலாற்றுப் பிழையாகும். 

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்துக! - வைகோ


என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள்:
நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்துக! - வைகோ அறிக்கை

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று இதே இரண்டாவது அனல்மின் நிலயத்தில் 6ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு இதே போல கொதிகலன் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். - DR.அன்புமணி ராமதாஸ்


என்.எல்.சி விபத்தில் 5 பேர் உயிரிழப்புக்கு 
நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்:
ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2வது அனல்மின் நிலையத்தில் உள்ள 5வது அலகில் இன்று பாய்லர் வெடித்துச் சிதறிய விபத்தில், 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  இவர்கள் தவிர, மேலும் 14 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தும், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் வேதனையளிக்கின்றன. உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அவசர சட்டத்துக்கு ஆளுனர் தாமதிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்


மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு 
இட ஒதுக்கீடு: ஆளுனர் தாமதிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரு வாரங்களுக்கு மேலாகியும், அவசரச் சட்டத்தை ஆளுனர் இன்னும் பிறப்பிக்கவில்லை. சமூகநீதி சார்ந்த விஷயங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுனர் தேவையின்றி தாமதம் செய்வது வருத்தமளிக்கிறது.

வான்வழி பூச்சிக்கொல்லித் தெளிப்பு மூலம் வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் சேவைகளை கொடியசைத்து நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.


மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் வான்வழி பூச்சிக்கொல்லித் தெளிப்பு மூலம் வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உள்ள ஹெலிபேட் தளத்திலிருந்து, பூச்சிக்கொல்லித் தெளிப்பு உபகரணங்களுடன் பெல் ஹெலிகாப்டரை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.