செவ்வாய், 27 ஜூலை, 2021

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவது தான் எனது இலக்கு.- DR.S.ராமதாஸ்



நடைமுறைக்கு வந்தது வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு: வாடிய மக்கள்
இனி வாழ்க்கையில் முன்னேறட்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கோரிக்கையை ஏற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரித்தது முதல் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்கப்படும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முந்தைய அரசின் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழகத்தின் உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் நலன் காக்கவும், சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் தொடர்ந்து போராடுவோம்.- கே.பாலகிருஷ்ணன்




ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும்; 
தமிழகத்தின் உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் நலன் காக்கவும்: 
சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் தொடர்ந்து போராடுவதென சிபிஐ(எம்) மாநிலக்குழு அறைகூவல்

நூற்றாண்டு விழா கொண்டாடும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தன்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கியூப புரட்சியை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்க வல்லரசு தொடர்ந்து சீரழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பொதுமன்றம் கியூபா மீதான தடையை நீக்க வேண்டுமென பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் தடையை நீக்க மறுக்கும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி கியூப அரசை கவிழ்க்க முயல்கிறது. இதை எதிர்த்து ஒன்றுபட்டு போராடி வரும் கியூப மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசினை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்-எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 29.7.2021 அன்று சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

விடுதலையின் அம்ரித் மகோத்சவம்: மின் பயன்பாடுகளின் முக்கிய ஒழுங்குமுறை அளவுருக்கள் அறிக்கையை வெளியிட்டனர் மத்திய மின்துறை அமைச்சர்கள்


 ஊரக மின்மயமாக்க கார்ப்பரேஷன் நிறுவனத்தின்  (REC) 52வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ள ஆர்இசி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தை மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் தொடங்கி வைத்தார். அப்போது இத்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், மின்துறை செயலாளர் திரு. அலோக் குமார், ஆர்இசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு சஞ்சய் மல்கோத்ரா மற்றும் மின்துறை அமைச்சக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பிரதமரின் தொடர் ஆதரவால் காதியின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் கூறினார்


 காதி பொருட்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்து வருவதன் காரணமாக கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் காதி பொருட்களின் விற்பனை பெருவாரியாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 2016 முதல் புதுதில்லியின் கெனாட் பிளேசில் உள்ள காதி விற்பனை வளாகத்தில் 11 வெவ்வேறு தருணங்களில் ஒரு நாளின் விற்பனை ரூ. 1 கோடியைக் கடந்திருக்கிறது. இன்று (ஜூலை 25, 2021) வானொலியில் ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் காதியின் இந்த செயல் திறன் பற்றி குறிப்பிடப்பட்டது.

சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 66 சதவீத பள்ளிகள் மற்றும் 60 சதவீத அங்கன்வாடி மையங்களில் குடிநீர் குழாய் இணைப்பு


 கொவிட்-19 தொற்றை முன்னிட்டு, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், உண்டு உறைவிட பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய, இங்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பிரச்சாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கினார்.

இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டு 10 மாதங்களுக்கு குறைவான காலத்தில், நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 6.85 லட்சம்(66 சதவீதம்) பள்ளிகள், 6.80 லட்சம்(60%) அங்கன்வாடி மையங்கள் மற்றும் 2.36 லட்சம் (69%) கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.