திங்கள், 2 ஆகஸ்ட், 2021

நவீன யுக தொழில்நுட்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய (Roorkee) ரூர்கி ஐஐடி-யில் 7 புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகம்


 நவீன யுக தொழில்நுட்பங்களின் அதிகரித்துள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் சிறப்புமிக்க பொறியியல், கட்டிடக்கலை, பொருளாதாரம் மற்றும் மேலாண்மை ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் புதிதாக ஏழு கல்வித் திட்டங்களை ரூர்கி இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐ.ஐ.டி.) அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்களும், பணிபுரியும் தொழில் வல்லுனர்களும் தங்களது துறைகளை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா நம்பிக்கை தெரிவித்தார். ஜூலை 30-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பழம்பெரும் தொழில்நுட்பக் கழகத்தில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசுகையில், “இது போன்ற புதிய முன்முயற்சிகள், பிறரிடமிருந்து தலைவர்களை வேறுபடுத்துகிறது. இந்தத் திட்டங்களின் சாராம்சம் மற்றும் தத்துவத்தை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்”, என்று அவர் தெரிவித்தார்.

மோட்டார் வாகன சட்ட திருத்தங்கள், சாலை பாதுகாப்பை மேம்படுத்தி உயிரிழப்பை குறைத்துள்ளது.- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி


 மோட்டார் வாகன சட்ட திருத்தங்கள், சாலை பாதுகாப்பை மேம்படுத்தி உயிரிழப்பை குறைத்துள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  திரு நிதின்கட்கரி கூறினார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவில் உள்ள தகவல்படி, கடந்த 2018ம் ஆண்டில் 4,67,044 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2019ம் ஆண்டில் 4,49,002 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2020ம் ஆண்டில் 3,66,138(தற்காலிகம்) விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.  மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், சாலை பாதுகாப்பு சூழலை மேம்படுத்தி உயிரிழப்புகளையும் குறைத்துள்ளது.  

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு. - வைகோ கண்டனம்

 மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்

மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு. - வைகோ கண்டனம்

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரம் இடங்களில், 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் அளிக்கப்படுகின்றன.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு இடம் கூட வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்தது.

பொதுமக்கள் விழிப்புடனும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் நடக்காவிட்டால் தமிழ்நாட்டில் மூன்றாவது அலையை தடுக்க முடியாது.- DR.S.ராமதாஸ்

 இழந்தவை போதும்: மூன்றாவது அலையில்

இருந்து தப்ப கட்டுப்பாட்டை கடைபிடிப்போம்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பரவும் வேகம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால், அடுத்த சில வராங்களில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து விடும் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், தினசரி பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எளிமைப்படுத்தப்பட்ட காப்புரிமை மற்றும் பதிப்புரிமை பதிவு முறை புதுமைகளின் மையமாக இந்தியா உருவாக உதவுகின்றன: திரு பியூஷ் கோயல்


 காப்புரிமைகள், வடிவமைப்புகள், பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தகம் முத்திரைகளை ஆராய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து திருப்தி தெரிவித்த மத்திய வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல், புதுமைகளின் மையமாக இந்தியா உருவாவதற்கு 'வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல்' பெரிய அளவில் உதவும் என்றார்.