நிதின் கட்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதின் கட்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூலை, 2022

டெல்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் பல புதிய சாலைத்திட்டங்கள் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் - நிதின் கட்கரி


 அமைக்கப்பட்டு வரும் தில்லி-மும்பை விரைவுச்சாலை, நாக்பூர்-மும்பை சம்ரித்தி மஹாமார்க் மற்றும் பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிராவில் மேலும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார். மும்பையில் இன்று சிஐஐ ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது 'சங்கல்ப் சே சித்தி - புதிய இந்தியா, புதிய தீர்வு மாநாட்டில்' பேசிய திரு கட்கரி, மும்பையை தில்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருவதாகக் கூறினார்.

வெள்ளி, 17 ஜூன், 2022

சிறந்த தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கட்டுமான செலவை குறைத்தல் ஆகியவையே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.- திரு.நிதின் கட்கரி


 கட்டமைப்பு மேம்பாட்டில் ‘தரம்’ குறித்து கவனம் செலுத்த, புதிய சிந்தனைகள், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான புதுமை கண்டுபிடிப்பு வங்கி ஒன்றை அமைக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பின் 22-வது மத்திய கால நிர்வாகக் குழு கூட்டத்தில், காணொலி வாயிலாகப் பேசிய அவர், இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பிடமிருந்து புதிய முன்முயற்சிகளை அரசு எதிர்பார்ப்பதாகவும், புதிய கண்டுபிடிப்புகளில் அனைத்து பொறியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.  ஐஐடி-க்கள் மற்றும் உலகிலுள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியுடன், உலகத்தரம் வாய்ந்த, அதிநவீன பரிசோதனைக் கூடம் ஒன்றை இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதன், 13 அக்டோபர், 2021

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக இறக்குமதிக்கு மாற்றான, செலவு குறைந்த, மாசற்ற மற்றும் உள் நாட்டு மாற்று எரி பொருளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.- திரு நிதின் கட்கரி


 மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாற்று எரி பொருள் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக இறக்குமதிக்கு மாற்றான, செலவு குறைந்த, மாசற்ற மற்றும் உள் நாட்டு மாற்று எரி பொருளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

தில்லியில் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் சார்பில், “மாற்று எரிபொருள்- சாலை முன்னேற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், பயோ எத்தனால் மாற்று எரிபொருள் மிக பெரிய நன்மையை விளைவிக்கும் சுத்தமான எரி பொருள்  என்றும் மிகவும் குறைந்த வாயு வெளியேற்றத்துடன் கூடிய பசுமை இல்ல எரிபொருள் என்றும் கூறினார்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.- திரு நிதின் கட்கரி

 


நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-925ஏ பகுதியில் அவசரகால தரையிறங்கும் வசதியை இன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என்று தெரிவித்தார்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தேசிய பணமாக்கல் திட்டம் கட்டுமானத் துறையினரிடையேயும், நிதி நிறுவனங்களிடையேயும் நம்பகத்தன்மையும், நம்பிக்கையையும் கட்டமைக்கும்.- திரு நிதின் கட்கரி


 தேசிய பணமாக்கல் திட்டம் கட்டுமானத் துறையினரிடையேயும், நிதி நிறுவனங்களிடையேயும் நம்பகத்தன்மையும், நம்பிக்கையையும் கட்டமைக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இயக்க ஆற்றலை மாற்றியமைப்பது தொடர்பான நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், தேசிய பணமாக்கல் திட்டத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி இலக்குடன் சாலைகள் 26 சதவீதப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

சனி, 21 ஆகஸ்ட், 2021

மும்பை-தானே நகரங்களின் மேம்பாட்டிற்காக கூடுதலாக ஒரு லட்சம் கோடி வழங்கப்படும் என்றும் திரு நிதின் கட்கரி உறுதியளித்தார்.


 நாக்பூரில் மகா மெட்ரோவால் நிறுவப்பட்டுள்ள சீதாபார்தி - ஜீரோ மைல் - கஸ்தூர்சந்த் பூங்கா வழித்தடமும், சுதந்திர பூங்காவும் நாக்பூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

நாக்பூர் மகா மெட்ரோவின் 1.6 கிலோமீட்டர் நீள சீதாபார்தி - ஜீரோ மைல் - கஸ்தூர்சந்த் பூங்கா வழித்தட திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு நாக்பூரில் அதிகளவில் உருவாக்கப்படுகிறது. நமது நாட்டிலேயே முதல் முறையாக இரட்டை அடுக்கு மெட்ரோ இங்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

புதன், 11 ஆகஸ்ட், 2021

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குறித்த நேரத்தில், வெளிப்படையான முறையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும்.- திரு நிதின் கட்கரி


 உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குறித்த நேரத்தில், வெளிப்படையான முறையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தினார். 

இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து பங்குதாரர்களின் ஒன்றுபட்ட குழு உணர்வு மற்றும் பங்களிப்பின் காரணமாக கொரோனா பெருந்தொற்று  காலத்தில் கூட நல்ல பலன்களை அடைய முடிந்தது என்றார். ஒரு நாளைக்கு 38 கிலோமீட்டர் எனும் உலக சாதனையை நாம் அடைந்திருந்தாலும், ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் என்பதே  இலக்கு என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதன், 4 ஆகஸ்ட், 2021

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் (Flex Fuel) ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்.- திரு நிதின் கட்கரி


 தனியார், வர்த்தக மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளின் குழுவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி சந்தித்தார்.

வாகனத் தொழிலின் தற்போதைய நிலை குறித்து அமைச்சரிடம் விளக்கியக் குழு, பிஎஸ்-6 பகுதி-2, கேஃப் பகுதி 2 உள்ளிட்ட மாசு சார்ந்த ஒழுங்குமுறைகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டது.

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

மோட்டார் வாகன சட்ட திருத்தங்கள், சாலை பாதுகாப்பை மேம்படுத்தி உயிரிழப்பை குறைத்துள்ளது.- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி


 மோட்டார் வாகன சட்ட திருத்தங்கள், சாலை பாதுகாப்பை மேம்படுத்தி உயிரிழப்பை குறைத்துள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  திரு நிதின்கட்கரி கூறினார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவில் உள்ள தகவல்படி, கடந்த 2018ம் ஆண்டில் 4,67,044 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2019ம் ஆண்டில் 4,49,002 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2020ம் ஆண்டில் 3,66,138(தற்காலிகம்) விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.  மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், சாலை பாதுகாப்பு சூழலை மேம்படுத்தி உயிரிழப்புகளையும் குறைத்துள்ளது.  

செவ்வாய், 20 ஜூலை, 2021

கொவிட் கட்டுப்பாட்டுக் காலத்தில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.


 கொவிட் கட்டுப்பாட்டுக் காலத்தில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில், 2020-21ம் ஆண்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் நாள் ஒன்றுக்கு 36.5 கி.மீ என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிக அதிகமான வேகம் என குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 12 ஜூலை, 2021

மணிப்பூரில் ரூ.4,148 கோடி மதிப்பிலான 16 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார்


 மணிப்பூரில் ரூ.4,148 கோடி மதிப்பிலான 16 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார்.

இது 298 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை திட்டம், அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற சாலைகளை அமைத்து மணிப்பூரை நாட்டின் இதர பகுதிகளுடனும், அண்டை நாடுகளுடனும்  இணைக்கும். இந்த சாலைகள் மணிப்பூரின் வேளாண், தொழில் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும். தொலை தூர பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகள் அளிக்கவும், வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவியாக இருக்கும்.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும்.- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி


 வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும்  பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி  3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

நாக்பூரில் முதல் திரவ இயற்கை எரிவாயு ஆலையை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

செவ்வாய், 6 ஜூலை, 2021

பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட காதியின் இயற்கை வண்ணப்பூச்சுக்கு பிராண்ட் தூதராக மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி தன்னை அறிவித்துக் கொண்டார்.


 பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட காதியின் இயற்கை வண்ணப்பூச்சுக்கு பிராண்ட் தூதராக  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தன்னை அறிவித்துக் கொண்டார். 

நாடு முழுவதும் உள்ள இளம் தொழில்முனைவர்களை, இந்த பசுஞ்சாண வண்ணப்பூச்சு தயாரிப்பில் ஈடுபடுவதற்கு அவர் ஊக்குவிப்பார். இந்த இயற்கை வண்ணப்பூச்சின் முதல் தானியங்கி ஆலையை ஜெய்ப்பூரில் இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், இதன் தொழில்நுட்ப புத்தாக்கத்தைப் பாராட்டினார். நாட்டில், ஊரக மற்றும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்த இது முக்கிய பங்காற்றும் எனவும் அவர் கூறினார். 

திங்கள், 5 ஜூலை, 2021

இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். இது கொரோனா மரணங்களை விட அதிகம்.- நிதின் கட்கரி


 விபத்துக்களை குறைக்க சாலை மேம்பாட்டின் அனைத்து நிலைகளிலும், பாதுகாப்பு தணிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

வாகன விபத்து பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது:

செவ்வாய், 29 ஜூன், 2021

தற்சார்பு இந்தியாவை உருவாக்க பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.- நிதின் கட்கரி



 தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு ‘இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்திகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் பேசிய அவர், தற்சார்பு இந்தியாவை உருவாக்க, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை, தோல் மற்றும் பழங்குடி தொழில்துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். தொழில்நுட்பப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தரமான வளர்ச்சி ஆகியவை தொழில்துறையின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று தெரிவித்தார்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

115 அடையாளம் காணப்பட்ட சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் (MSME) இருப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது.- திரு. நிதின் கட்கரி

 115 சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை தடம் பதித்து மேம்படுத்தப்படுவதை திரு. நிதின் கட்கரி வலியுறுத்தினார்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று, இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா @75 உச்சி மாநாடு: இயக்கம் 2022 என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். நாட்டின் 115 அடையாளம் காணப்பட்ட சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் (MSME) இருப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு தற்போது மிகக் குறைவு, ஆனால் அவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டால், இவை வேலைவாய்ப்பை பெரிய அளவில் மேம்படுத்தலாம்.

சனி, 1 ஆகஸ்ட், 2020

காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார்.


காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார்.

காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். காதி கிராமத்தொழில் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிசுப் பெட்டியை குறு, சிறு ,நடுத்தரத் தொழில்துறை மத்திய அமைச்சர் திரு நிதின்கட்காரி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பரிசுப் பெட்டியில் பல்வேறு வண்ணங்கள், அச்சுக்களுடன் கூடிய கைவேலைப்பாடு கொண்ட 4 பட்டு முகக் கவசங்கள் இருக்கும். கருப்பு வண்ணத்தில், பொன்னிறத்தில் அச்சிடப்பட்ட, கைகளால் தயாரிக்கப்பட்ட கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காகிதப் பெட்டிக்குள் இந்த முகக் கவசங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

வெள்ளி, 31 ஜூலை, 2020

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, திரு.நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.


பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்ச்ர திரு.நிதின் கட்கரி, இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.   நிகழ்ச்சிக்கு, பீகார் முதலமைச்சர் திரு.நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.  மத்திய அமைச்சர்கள் திரு.ராம்விலாஸ் பாஸ்வான், திரு.ரவிசங்கர் பிரசாத், மத்திய இணையமைச்சர்கள்  திரு.வி.கே.சிங், திரு.அஸ்வனிகுமார் சவுபே மற்றும் திரு.நித்தியானந்த் ராய், துணை முதலமைச்சர் திரு. சுசில்குமார் மோடி, மாநில சாலைக் கட்டுமானத் துறை அமைச்சர் திரு.நந்த் கிஷோர் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி, திரு.ராம் கிரிபால் யாதவ், திரு.பசுபதி குமார் பரஸ் மற்றும் திருமதி.வீனா தேவி, மத்திய – மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.  

வெள்ளி, 26 ஜூன், 2020

இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, அறிவாற்றலை செல்வமாக மாற்றுவது அவசியம் – திரு.நிதின் கட்கரி


கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, பொறியியல் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளுடன், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து      நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி, நேற்று (25 ஜுன், 2020) காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார். 

ஊரடங்கு  காலத்தில், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் குறுகிய கால நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும்,    “ஆக்கப்பூர்வ மனப்பான்மையும் தன்னம்பிக்கையும்”  இருந்தால், தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறலாம் என்று அவர் பொறியியல் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்தார். 

சனி, 6 ஜூன், 2020

'நெடுஞ்சாலைகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறப்பதைத் தடுக்க' தேசிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நிதின் கட்கரி தொடங்கினார்.



சாலைகளில் இறப்புகள் ஏற்படுவதைக் குறைக்கவும், தடுக்கவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியையும், விதிகள் குறித்த அறிவையும் உருவாக்கும் தேவை இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி வலியுறுத்தினார். சூழலியலும், நிலைத்தன்மையும் மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய விழிப்புணர்வுப் பிரச்சாரமான நெடுஞ்சாலைகளின் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறப்பதைத் தடுத்தலை' காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த அமைச்சர், நெறிமுறைகள், பொருளாதாரம் மற்றும் சூழலியல் ஆகியவை நமது நாட்டின் மூன்று முக்கியத் தூண்கள் என்றுக் குறிப்பிட்டார்.
 
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட திரு கட்கரி, சுமார் 1.5 லட்சம் உயிர்கள் இதில் போவதாகக் கூறினார். வரும் 31 மார்ச்சுக்குள் இவற்றில் 20 முதல் 25 சதவீதம் வரைக் குறைக்க தான் முயற்சி எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஐந்தாயிரத்துக்கும் அதிகமான விபத்து அதிகமாக நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகள் காண அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகள் காணத் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 1739 புதிதாகக் கண்டறியப்பட்ட விபத்து இடங்களில் குறுகிய கால நடவடிக்கைகளும், 840 புதிதாகக் கண்டறியப்பட்ட விபத்து இடங்களில் நீண்ட கால நடவடிக்கைகளும் இது வரை எடுக்கப்பட்டுள்ளன.