செவ்வாய், 25 ஜூன், 2019

தமிழ் 9-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்


  • தமிழ்  9-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்

  • செவிக்குணவாவது - கேள்வி
  • ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் - ஊற்றுக்கோல்
  • காமராசர், தம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட இடம் - மெய்கண்டான் புத்தகசாலை 
  • காமராசர் ஆட்சிகாலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர் - சி.சுப்பிரமணி
  • காமராசருக்கு நடுவணரசு அளித்த விருது - பாரத ரத்னா
  • காமராசர் பிறந்த நாளை என்னவாக கொண்டாடுகிறோம் - கல்வி வளர்ச்சி நாள்
  • காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு - 1954
  • தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்

திங்கள், 24 ஜூன், 2019

தமிழ் 9-வது புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்


தமிழ்  9 வது புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்

Ø  கல்வியில் பெரியார் என அழைக்கப்பெறுபவர் - கம்பர்
Ø  கம்ப ராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை - ஆறு
Ø  கம்பர் பிறந்த ஊர் - தேரழந்தூர்
Ø  மொழிகள் பல தோன்றி வளர அடிப்படையான மொழி - மூலமொழி
Ø  இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிட்டவர் - ச.அகத்தியலிங்கம்
Ø  ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை - கிளை மொழியை என்பர்
Ø  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் - கால்டுவெல்
Ø  தமிழ்மொழியிலுள்ள மிகப் பழைமையான நூல் - தொல்காப்பியம்
Ø  உறா அர்க் குறுநோய் உரைப்பாய் இத்தொடரில் இடம்பெற்றுள்ள அளபெடை - செய்யுளிசை
Ø  உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு இக்குறட்பாத் தொடரில் வந்துள்ள அளபெடை - இன்னிசை அளபெடை
Ø  அளபெடை என்னும சொல்லின் பொருள் - நீட்டித்து ஒலித்தல்
Ø  அளபெடை எத்தனை வகைப்படும் - இரண்டு
Ø  முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
Ø  கழுத்தினின்று பிறப்பது - இடையினம்
Ø  வல்லின எழுத்துக்களின் இடப்பிறப்பு - மார்பு
Ø  உதடுகள் இரண்டும் பொருந்துவதானல் பிறக்கும் எழுத்துக்கள் - ப், ம்
Ø  திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் ஒருவர் - நச்சர்
Ø  தென்திராவிட மொழிகளுள் ஒன்று - தமிழ்
Ø  குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவர் - கம்பர்
Ø  ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்தின் எண்ணிக்கை - 11
Ø  நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாரட்டப் பெற்றவர் - பாரதியார்
Ø  துரியோதனனி தந்தை - திருதராட்டிரன்
Ø  காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் - நாமக்கல் கவிஞர்
Ø  உவமைக் கவிஞர் - சுரதா
Ø  கண்ணன் என்பது எந்த பகுபதம் ஆகும் - சினைப்பெயர்
Ø  இடைச்சொற்கள் – பகாபதம்
Ø  மதுரையான் என்பது என்ன - இடப்பெயர்பகுபதம்
Ø  பகுபதத்தில் குறைந்த அளவு இருக்க வேண்டிய உறுப்புகள் - பகுதி, விகுதி
Ø  செய்தான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை - த்
Ø  நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி இத்தொடர் - எண்ணலளவை ஆகுபெயர்
Ø  பொருள்கோள் எத்தனை வகைப்படும் - எட்டு
Ø  பாடலின்  சொற்களை  முறை மாற்றாமல்  வரிசையாக  அமைத்து  பொருள் கொள்வது - நிரல்  நிறைப் பொருள்கோள்
Ø  திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்
Ø  திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்கள் - 3
Ø  இறைவனிடம் பாடலைப்பெற்றுச் சென்றவன் - தருமி
Ø  பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவன் - நக்கீரர்
Ø  உடல் முழுவதும் கண்களையுடையவன் - இந்திரன்
Ø  கடல் பயணத்தை முந்நீர் வழக்கமெனக் குறிப்பிடும் நூல் - தொல்காப்பியம்
Ø  கடலில் செல்லும் பெரிய கலம் - நாவாய்
Ø  மெய்யும் ஆய்தமும் யாப்பில் என்னவென்று அழைக்கப்படும் - ஓன்றெழுத்து
Ø  காய்ச்சீர் எத்தனை வகைப்படும் - நான்கு
Ø  ஆசிரியப்பாவுக்கு உரிய சீர்கள் - மாச்சீர்
Ø  வெண்பாவில் உயர்வு என்னும் ஈற்றுச் சீரில் வரும் ஓசையின் வாய்பாடு - பிறப்பு
Ø  உலகில் இல்லாத பொருளை உவமித்து கூறுவது - இல்பொருள் உவமையணி
Ø  கருதிய பொருளை நிலைநாட்ட சிறப்பு பொருளாலும் கூறி விளக்குவது - வேற்றுப்பொருள் வைப்பணி

காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும்! - ராமதாஸ்

காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக 
பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும்!
-ராமதாஸ் அறிக்கை


காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கை வழங்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையை செயல்படுத்தாத கர்நாடக அரசு, அங்குள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை அதன் சொந்தத் தேவைக்காக பயன்படுத்தி வருகிறது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

BIGG BOSS 3வது சீசன் போட்டியாளர்களின் BIODATA

1. முதல் போட்டியாளர் பாத்திமாபாபு டீவியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். பின் பாலசந்தர் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். பின்னர் பல்வேறு படங்களில் நடித்தார். அதிமுக கட்சியில் இணைந்து கட்சிப்பணி ஆற்றியவர். 



2-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா சென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து உள்ளார்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் நாட்டு டீவி ஷோவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. 









3 . மூன்றாவது போட்டியாளர். இவர் பெங்களுரில் மாடலாக பணியாற்றி பின் சினிமாவுக்குள் நுழைந்தார். நிறைய விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும்  நடித்தார் . மேலும் இவர் ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்து புகழ் பெற்றார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக அறிமுகாமாகியுள்ளார். 





4. நாலாவது பிகபாஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ள மதுமிதா விஜய் டிவி லோள்ளு சபா  காமெடி நடிகை. ஒரு கல் ஒரு காண்ணாடி படத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர். தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இப்போது பிக்பாஸில் களமிறங்கியுள்ளார். 



5  கவின் விஜய் டீவித் தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர். டீவித் தொடர்கள் மூலம் புகழ் பெற்ற பின் சினிமாவில் “நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் மூலம் ஹிரோவானார். இப்படம் மிகச் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. 

6 வது போட்டியாளராக அபிராமி வெங்கடாச்சலம்  பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இவர் ஒரு மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர் விளம்பரங்கள் மூலம்  புகழ் பெற்றவர். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.


7 வது போட்டியாளராக  "பருத்திவீரன்" சரவணன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.  தமிழ் சினிமா 90 களில் கதாநாயகன். பின்னர் இயக்குநர் பாலா இயக்கிய நந்தா திரைப்படத்தில் வில்லனாக ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு மாமாவாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டிங்கும் பிரபலமானார். மீண்டும் சினிமாவில் பிஸியாகி பல படங்களில் கேரக்டர் ரோல்களில் வலம் வருகிறார் . தற்போது நடிகர் சங்க தேர்தலில் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.


 8 வனிதா விஜயகுமார்  
 நடிகர் விஜய்குமார் மஞ்சுளா தம்பதியின் மகளாவார்   மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானவர். நடிகர் விஜய் ஜொடியாக நடித்தவர்.விஜய்குமார் குடும்பத்துடனும் பிரச்சனைகளில் சிக்கி பத்திரிக்கைகளில் வலம் வந்து கொண்டே இருந்தார். நடிகர் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் போலிஸ் கோர்ட் என பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர்.




9 . சேரன் 

பிக்பாஸின் மற்றொரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். சேரன் பாரதிக் கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.  ஆட்டோகிராப் படம் மூலம் நடிகராக மாறினார். தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர்.  திருட்டு விசிடி எதிராக C2H ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அதில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அவரை பட இயக்கத்திலிருந்து தள்ளி வைத்தது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். 


10. ஷெரீன் 

ஷெரீன் கன்னட மாடல். படிப்பிற்குப் பின் 16 வயதில் மாடலான இவர் அதே வருடத்தில் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். அதே வருடத்தில் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ் உடன் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது. தமிழ் ,கன்னடம் , மலையாளம் என பல மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் ஹிரோயினாக நடித்துள்ளார். 


11 மோகன் வைத்தியா 


கர்நாடக பாடகர், இசைக் கலைஞர், வீணைக்கலைஞர். நாடக மேடைகளில் நடிக்க கூடியவர். டீவித் தொடர்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற பாடகர் வீணை ராஜேஷ் வைத்தியாவின் சகோதரர் இவர்.  60 வயதில் கலந்து கொள்ளும் ஒரே போட்டியாளர் இவர். 



12 . தர்ஷன் தியாகராஜா 
இலங்கை தமிழர்  சாஃப்ட் வேர் துறையில் இருந்தவர். பின்னர்  மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர்.  ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்திருக்கிறார்.



13 . சாண்டி 

நடன இயக்குநர். விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் உட்பட டீவி நடனப்போட்டிகளில் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர்.  நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமானவர். ரஜினிக்கு காலா படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். கமலை மேடையில் ஆடவைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். 

14. முகேன் ராவ் 


மலேஷியன் பாடகர். மலேஷியாவில் பிறந்து வளர்ந்தவர். சுதந்திரப்பாடகராக பல ஆல்பங்களில் பாடியுள்ளார். யூடுயூப் வீடியோக்கள் இவரை புகழுக்கு அழைத்து சென்றது. தொடர்ந்து பாடலகள் எழுதி பாடி ஆலபங்கள் வெளியிட்டார். சிறிய ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஒரு நல்ல இடத்தை தன் திறமையால் பெற்றவர். வெளிநாட்டில் இருந்து தமிழ் ஷோ ஒன்றில் கலந்து கொள்ளும் இரண்டாவது நபர். 





15 . ரேஷ்மா பசுபுலேதி ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகை, இவர் தமிழ் மொழி சார்ந்த முக்கியமாக சன் தொலைக்காட்சியில் சன் சீங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். பின்னர்  வம்சம் , ஆண்டாள் அழகர்  வாணி ராணி,  மரகத வீனை சீரியல்களில் நடித்தார்.

மேலும் சில படங்களில் நடித்தார். கோ2 மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியுடன் என்பவரின் மனைவியாக புஷ்பா பாத்திரத்தில் அவருக்கு நல்ல பெயரைக் கொண்டு வந்தது. தற்போது சீசன் 3 இல் பிக் பாஸ் போட்டியாளர்களில் ரேஷ்மாவும் ஒருவர். 




ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பது ஆர்.எஸ்.எஸின் ஒற்றைக் கலாச்சாரமே! - கி. வீரமணி

ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பது ஆர்.எஸ்.எஸின் ஒற்றைக் கலாச்சாரமே!
மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து கருவிலேயே இதனை அழிக்கவேண்டும்! மறைமுகமாக அதிபர் ஆட்சிக்கான ஏற்பாடு !!!
- கி. வீரமணி எச்சரிக்கை !
(திரவிடர் கழகம்)



ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மத்திய பி.ஜே.பி. அரசு கூறுவது ஆர்.எஸ்.எஸின் ஒற்றைக் கலாச்சாரத்தைச் செயல்படுத்தும் யுக்தியே! மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த முடிவை மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து கருவிலேயே இந்த முயற்சியை அழிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு: