திங்கள், 24 ஜூன், 2019

தமிழ் 9-வது புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்


தமிழ்  9 வது புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்

Ø  கல்வியில் பெரியார் என அழைக்கப்பெறுபவர் - கம்பர்
Ø  கம்ப ராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை - ஆறு
Ø  கம்பர் பிறந்த ஊர் - தேரழந்தூர்
Ø  மொழிகள் பல தோன்றி வளர அடிப்படையான மொழி - மூலமொழி
Ø  இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிட்டவர் - ச.அகத்தியலிங்கம்
Ø  ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை - கிளை மொழியை என்பர்
Ø  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் - கால்டுவெல்
Ø  தமிழ்மொழியிலுள்ள மிகப் பழைமையான நூல் - தொல்காப்பியம்
Ø  உறா அர்க் குறுநோய் உரைப்பாய் இத்தொடரில் இடம்பெற்றுள்ள அளபெடை - செய்யுளிசை
Ø  உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு இக்குறட்பாத் தொடரில் வந்துள்ள அளபெடை - இன்னிசை அளபெடை
Ø  அளபெடை என்னும சொல்லின் பொருள் - நீட்டித்து ஒலித்தல்
Ø  அளபெடை எத்தனை வகைப்படும் - இரண்டு
Ø  முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
Ø  கழுத்தினின்று பிறப்பது - இடையினம்
Ø  வல்லின எழுத்துக்களின் இடப்பிறப்பு - மார்பு
Ø  உதடுகள் இரண்டும் பொருந்துவதானல் பிறக்கும் எழுத்துக்கள் - ப், ம்
Ø  திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் ஒருவர் - நச்சர்
Ø  தென்திராவிட மொழிகளுள் ஒன்று - தமிழ்
Ø  குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவர் - கம்பர்
Ø  ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்தின் எண்ணிக்கை - 11
Ø  நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாரட்டப் பெற்றவர் - பாரதியார்
Ø  துரியோதனனி தந்தை - திருதராட்டிரன்
Ø  காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் - நாமக்கல் கவிஞர்
Ø  உவமைக் கவிஞர் - சுரதா
Ø  கண்ணன் என்பது எந்த பகுபதம் ஆகும் - சினைப்பெயர்
Ø  இடைச்சொற்கள் – பகாபதம்
Ø  மதுரையான் என்பது என்ன - இடப்பெயர்பகுபதம்
Ø  பகுபதத்தில் குறைந்த அளவு இருக்க வேண்டிய உறுப்புகள் - பகுதி, விகுதி
Ø  செய்தான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை - த்
Ø  நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி இத்தொடர் - எண்ணலளவை ஆகுபெயர்
Ø  பொருள்கோள் எத்தனை வகைப்படும் - எட்டு
Ø  பாடலின்  சொற்களை  முறை மாற்றாமல்  வரிசையாக  அமைத்து  பொருள் கொள்வது - நிரல்  நிறைப் பொருள்கோள்
Ø  திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்
Ø  திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்கள் - 3
Ø  இறைவனிடம் பாடலைப்பெற்றுச் சென்றவன் - தருமி
Ø  பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவன் - நக்கீரர்
Ø  உடல் முழுவதும் கண்களையுடையவன் - இந்திரன்
Ø  கடல் பயணத்தை முந்நீர் வழக்கமெனக் குறிப்பிடும் நூல் - தொல்காப்பியம்
Ø  கடலில் செல்லும் பெரிய கலம் - நாவாய்
Ø  மெய்யும் ஆய்தமும் யாப்பில் என்னவென்று அழைக்கப்படும் - ஓன்றெழுத்து
Ø  காய்ச்சீர் எத்தனை வகைப்படும் - நான்கு
Ø  ஆசிரியப்பாவுக்கு உரிய சீர்கள் - மாச்சீர்
Ø  வெண்பாவில் உயர்வு என்னும் ஈற்றுச் சீரில் வரும் ஓசையின் வாய்பாடு - பிறப்பு
Ø  உலகில் இல்லாத பொருளை உவமித்து கூறுவது - இல்பொருள் உவமையணி
Ø  கருதிய பொருளை நிலைநாட்ட சிறப்பு பொருளாலும் கூறி விளக்குவது - வேற்றுப்பொருள் வைப்பணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக