வியாழன், 20 ஜூன், 2019

அமலாபால் ‘ஆடை’ டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு


அமலாபால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "ஆடை ", மேயாத மான் ரத்னகுமார் இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.


அமலாபால் நடிப்பில் உருவாகும் ஆடை படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தில் சவாலான, துணிச்சல் மிக்க காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளார். 

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான நிலையில் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ‘ஆடை’ டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக