வியாழன், 20 ஜூன், 2019

காஜல் ஜெயந்தி

கோமாளி படக்குழுவினர் “காஜல்ஜெயந்தி” என்ற  பெயரில் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.



\


ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் படம் கோமாளி. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 

ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோமாளி படக்குழு வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கோமாளி படக்குழுவினர் “காஜல்ஜெயந்தி” என்ற  பெயரில் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக