ஞாயிறு, 23 ஜூன், 2019

தமிழ் 8-வது புத்தகம்- மூன்றாம் பருவம் குறிப்புகள்

  • தமிழ்  8-வது புத்தகம்- மூன்றாம் பருவம் குறிப்புகள்

  • திருவருட்பாவை இயற்றியவர் - இராமலிங்க அடிகளார்
  • திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை - 5818
  • தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது - வாணியல் அறிவு
  • உலகம் எதனால் ஆனது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. - ஐம்பூதங்களால்
  • வானில் உள்ள மிகப்பெரிய விண்மீன் - ஞாயிறு
  • தாமே ஒளிவிடக் கூடியவை - வான்மீன்
  • நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமெனில் முதலெழுத்தும் சேர்வது - புணர்ச்சி
  • தோன்றல், திரிதல், கெடுதல் என்பன - விகாரப் புணர்ச்சி
  • வாழை ± தோட்டம் என்பது - விகாரப் புணர்ச்சி
  • நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது - இயல்புப்புணர்ச்சி
  • விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் - மூன்று
  • வில்லிபாரதத்தைப் பாடியவர் - வில்லிபுத்தூரார்
  • வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் - வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
  • கவிஞர் முடியரசனின் இயற்பெயர் - துரைராசு
  • முடியரசன் பிறந்த ஊர் - தேனி, பெரியகுளம்
  • தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் - பூங்கொடி
  • தனித்தமிழுக்கு வித்திட்டவர்  - பரிதிமாற்கலைஞர்
  • சென்னை அண்ணாசாலையில் மாவட்ட மைய நூலகம் யார் பெயரில் உள்ளது. - தேவநேயப் பாவாணர்
  • மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1981
  • பாடும் பாடல் - இத்தொடரில் பாடல் என்பது - வருமொழி
  • பலவாண்டு - இச்சொல் பிரியும் முறை - பல + ஆண்டு
  • பனை + ஒலை - இரண்டிற்கம் இடையில் தோன்றுவது - ய்
  • வான் பெற்ற நதி - கங்கையாறு
  • துழாய் அலங்கல் என்பதன் பொருள் - துளசி மாலை
  • தாழ்ச்சி என்பதன் எதிர்ச்சொல் - உயர்ச்சி
  • அடிமையலன் - இச்சொல்லை பிரிக்கும் முறை - அடிமை + இலன்
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் -  குமரகுருபரர் 
  • பிள்ளைத்தமிழிலுள்ள பருவங்களின் எண்ணிக்கை - 18
  • இறைவனையோ  நல்லாரையோ  பாட்டுடைத்  தலைவராகக்கொண்டு  அவரைக்  குழந்தையாக  கருதி பாடப்படும் சிற்றிலக்கிய வகை.   பிள்ளைத்தமிழ் 
  • பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல் அமைந்துள்ள பருவம் - வருகை
  • இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது - நகைச்சுவை
  • அசை எத்தனை வகைப்படும் - இரண்டு
  • செய்யுள் இயற்றும் இலக்கணத்துக்கு பெயர் - யாப்பிலக்கணம்
  • உவமானத்தின் தன்மையை உவமேயத்தில் ஏற்றிக்கூறுவது - உருவக அணி
  • இலக்கியச் சுவைகளில் நுட்பமானது - நகைச்சுவை
  • கம்பராமாயண வானரத்தலைவன் - வாலி
  • கலிங்கத்துப்பரணி ஆசிரியர் - ஜெயங்கொண்டர்
  • மருமக்கள் வழி மான்மியம் ஒரு - நகைச்சுவை களஞ்சியம்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக