ஞாயிறு, 23 ஜூன், 2019

தமிழ் 8-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்

தமிழ் 8-வது புத்தகம்  இரண்டாம் பருவம் குறிப்புகள்

  • சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது - நாவற்பழம்
  • பெண்ணின் முகத்திற்க்கு ஒப்புமையாகக் காட்டப்பட்டுள்ளது.-வான் நிலவு
  • காந்திபுராணம் இயற்றியவர் - அசலாம்பிகை அம்மையார்
  • காந்திபுராணத்தின் பாட்டுடைத்தலைவர் - காந்தியடிகள்
  • ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி - வேலு நாச்சியார்
  • வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு - கி.பி.1730
  • சிவகங்கையை ஆண்ட மன்னர் - முத்துவடுகநாதர்
  • அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் - லீலாவதி
  • சீனுவாச காந்தி நிலையம் அமைத்தவர்- அம்புஜத்தம்மாள்
  • வளர்பிறை என்பது - வினைத்தொகை
  • செம்மொழி என்பது - பண்புத்தொகை
  • கயல்விழி என்பது - உவமைத்தொகை
  •  மா பலா வாழை என்பது - உம்மைத்தொகை
  • மற்றுப்பிற என்னும் தொடரில் மற்று என்பது - இடைச்சொல்
  • சாலப் பசித்தது என்பது - உரிச்சொல்
  • கூடிப் பேசினர் என்றும் தொடர் - வினையெச் தொடர்
  • விவேகசிந்தாமணிப் பாடலில் நாவற்பழத்திற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ள உயிரி - வண்டு 
  • அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் - திண்டிவனம் (இரட்டணை)
  • பாரத்தாய் பாடலில் குறிப்பிடப்படும் தாய்மையுள்ளம் கொண்டவர் - காந்தியடிகள்
  • இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு -
  • பாம்பு பாம்பு என்பது - அடுக்குத் தொடர்
  • திருமந்திரம் இயற்றியவர் - திருமூலர்
  • திருமந்திரத்தின் புகழ்மிக்கத் தொடர் - ஓன்றே குலம் ஒருவனே தேவன்
  • தேம்பாவணி நூலின் ஆசிரியர் - வீரமாமுனிவர்
  • வீரமாமுனிவர் இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • வீரமாமுனிவர் எந்த நாட்டை சார்ந்தவர் - இத்தாலி
  • தமிழ்நாடகத் தந்தை - பம்மல் சம்பந்தனார்
  • சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் - அடியார்க்கு நல்லார்
  • மறைமலையடிகள் எழுதிய நாடகம் - சாகுந்தலம்
  •  ஊர் உறங்கியது - இடவாகு பெயர்
  • நீலம் சூடினாள் - பண்பாகு பெயர்
  • வறுவல் தின்றான் என்பது - தொழிலாகு பெயர்
  • சித்திரை வந்தாள் - காலவாகு பெயர்
  • கம்பர் பிறந்த ஊர் - தேரழந்தூர்
  • கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
  • கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை. - ஆறு
  • அழகின் சிரிப்பு நூலை எழுதியவர் - பாரதிதாசன்
  • பாரதிதாசன் இயற்பெயர் - சுப்புரத்தினம்
  • பாரதிதாசன் பிறந்த ஊர் - புதுச்சேரி
  • உலகிலேயே அதிக மழைபெறும் இடம் - சிரபுஞ்சி
  • வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1972
  • வினைமுற்று,  பெயர்ச்சொல்,  வினைச்சொல்  ஆகியவற்றை  பயனிலையாக  கொண்டு  முடிவது - முதல் வேற்றுமை
  • பெயர்ச்சொல்லை கருத்தாவாக மாற்றுவது - மூன்றாம் வேற்றுமை
  • கிழமைப்பொருளில் வருவது. - ஆறாம் வேற்றுமை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக