வியாழன், 30 ஜூன், 2022

இந்தியர் ஒவ்வொருவரும் எளிதாக தொழில் தொடங்க முத்ரா திட்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. - பிரதமர் திரு. நரேந்திர மோடி


 ‘தொழில்முனைவோர் இந்தியா’ நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, ‘உருவாதல் மற்றும் விரைவுபடுத்தும் எம்எஸ்எம்இ செயல்பாட்டுத்’ திட்டம், முதன்முறை எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களின் கட்டமைப்புத் திறன் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (பிஎம்இஜிபி) முதல் எம்எஸ்எம்இ துறையை முன்னேற்றுதல் வரையிலான புதிய அம்சங்கள் போன்ற முக்கியமான முன்முயற்சிகளையும் தொடங்கிவைத்தார். 2022-23-க்கான பிஎம்இஜிபி பயனாளிகளுக்கு உதவித் தொகையை டிஜிட்டல் வழியாக அவர் பரிவர்த்தனை செய்துவைத்தார்; எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2022-ன் முடிவுகளையும் அறிவித்தார்; தேசிய எம்எஸ்எம்இ விருதுகளை வழங்கினார்; தற்சார்பு இந்தியா நிதியத்தில் 75 எம்எஸ்எம்இ-களுக்கு டிஜிட்டல் சமபங்கு சான்றிதழ்களை வழங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு.நாராயண் ரானே, திரு.பானு பிரதாப் சிங் வர்மா, நாடு முழுவதிலும் இருந்து எம்எஸ்எம்இ சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்போம்! - தொல்.திருமாவளவன்

 


குடியரசுத் தலைவர் தேர்தல்: சனாதனப் பயங்கரவாதிகளின் அடையாள அரசியல் எனும் சதித்திட்டத்தை முறியடிப்போம்! 

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்போம்! 

ஆந்திரா மற்றும் ஒடிசா முதல்வர்கள் இருவரும் தங்களின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! 

உலக வரலாற்றில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமானவை ஹிட்லரின் நாசிக் கொள்கையும், முசோலினியின் பாசிசக் கொள்கையும் என்பதை உலகம் அறியும். அத்தகைய இனவாதக் கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு வரையறுக்கப்பட்டதுதான் சங்பரிவார்களின் "ஒரேதேசம் - ஒரே கலாச்சாரம் " என்னும் மதவாத - சனாதனப் பயங்கரவாதக் கருத்தியலாகும். அதாவது சனாதனவாதிகள் இங்கே கட்டமைக்க விரும்பும் இந்து ராஷ்டிரம் ஒரே தேசம் என்பது என்பது ஹிட்லரின் ஜெர்மனியையும் முசோலினியின் இத்தாலியையும் தம்முடைய ஆதர்சமாகக் கொண்டதே ஆகும்.  ஹிட்லரின் இனவெறி ஆட்சியில் எப்படி யூதர்கள் மட்டுமின்றி ஜெர்மானியர்களும் கொடூர வதைகளுக்கு ஆளானார்களோ அதுபோலவே இந்து ராஷ்டிரம் என்பதும் இங்கே  சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி இந்துக்களுக்கும் பேராபத்தாகவே முடியும். அத்தகைய இந்து ராஷ்டிரத்தை அமைத்திட  அனைத்துத் தளங்களிலும் தமக்கு ஆதரவானவர்களை ஆங்காங்கே சனாதனிகள் தேடித்தேடி முதன்மையான அதிகார மையங்களில் அமர்த்தி வருகின்றனர். 

திங்கள், 27 ஜூன், 2022

பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு கடவுள் வசிப்பார் என்றும் சொல்வது உண்டு. ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் பல்வேறு சமூக தீமைகள் தலைதூக்கியுள்ளன.


 உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணா குடிலுக்கு சென்ற  குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், அங்கு தங்கியிருப்பவர்களுடன்  கலந்துரையாடினார்.

 அங்கு திரண்டிருந்தவர்களிடையே  பேசிய  குடியரசுத் தலைவர், நமது கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுவதாக  கூறினார்.  

‘பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு கடவுள் வசிப்பார் என்றும் சொல்வது உண்டு.   ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் பல்வேறு சமூக தீமைகள் தலைதூக்கியுள்ளன. குழந்தை திருமணம், சதி மற்றும் வரதட்சணை, விதவை வாழ்க்கை போன்ற சமூக தீமைகள் உருவெடுத்துள்ளன.  இதுபோன்ற சமூக தீமைகள் நம் நாட்டின் கலாச்சாரம் மீது படிந்த கறைகளாகும்.

வியாழன், 23 ஜூன், 2022

விவசாயத்தில்உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும்.- மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்


 விவசாயத்தில்உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் சோலன் நகரில் ஃபிக்கி சார்பில் நடந்த விவசாயத்தில் ரசயானங்கள் பயன்பாடு குறித்து 11 வது மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு  உழைப்புக்கேற்ற ஊதியம்  என்பது முக்கியம் என்று கூறிய அவர்,  உற்பத்தி அதிகரிப்பதும் முக்கிய தேவையாக உள்ளது என்று கூறினார். மேலும் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிப்பதில் நாடு முக்கிய பணியை செய்துகொண்டிருப்பதாகவும், வேளாண்மையில் விவசாயிகளுக்கு வரும் லாபத்தை அதிகரிப்பது முக்கியமானது என்றும், அறுவடைக்கு பிந்தைய நஷ்டத்தை குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  இதற்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாகவும், அதேநேரத்தில், விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லாபம் தரும் பயிர்களை விளைவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

செவ்வாய், 21 ஜூன், 2022

யோகா சிறந்த விலையில்லா மருந்து என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

 


சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி காந்தித்திடலில் நடைபெற்ற பெருந்திரள் யோகா பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது அதிகரித்து வரும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கையில் யோகா நமது மனதை ஒருமுகப்படுத்துகிறது.  யோகா உடற்பயிற்சியாகவும் மருந்தாகவும் மன அமைதி தருவதாகவும் உள்ளது என்றார்.