ஃபின்டெக் (நிதி சார்ந்த தொழில்நுட்பம்) முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக ஃபோன்பே, ஏடபிள்யூஎஸ், இஒய் ஆகியவற்றுடன் இணைந்து பிப்ரவரி 7 முதல் 28 வரை 3 வார கால இணையவழியிலான ‘ஃபின்டெக் ஓபன்’ உச்சி மாநாட்டிற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் முன்னிலையில் இன்று தொடங்கிவைத்தார்.
