உ.வாசுகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உ.வாசுகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஆகஸ்ட், 2021

கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். - தோழர் உ.வாசுகி


 கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம்  மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கணவனால் மனைவி மீது நடத்தப்படும் வன்முறை கடந்த காலத்தில் குற்றமாகக் கருதப்படவில்லை. குடும்பம் என்கிற "புனிதமான" அமைப்புக்குள் சட்டமும் அரசாங்கமும் தலையிடக் கூடாது என்கிற வாதங்கள்தான் முன்வைக்கப்பட்டன. 

பெண்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலகட்ட போராட்டங்களுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் பிறகுதான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்பது கொண்டுவரப்பட்டது. 

செவ்வாய், 23 ஜூன், 2020

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை மட்டுமல்ல, கோபத்தையும் ஒருங்கே வரவழைக்கிறது.- உ.வாசுகி


உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை மட்டுமல்ல, கோபத்தையும் ஒருங்கே வரவழைக்கிறது.. கௌசல்யாவின் தாய் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதை இத்தீர்ப்பு உறுதி செய்வதோடு, தந்தையையும் குற்றங்களில் இருந்து விடுவித்து இருக்கிறது. 300 பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடிய தீர்ப்பினை முழுமையாக ஆய்வு செய்தால்தான் எந்த அடிப்படையில் உயர் நீதிமன்றம் இந்த முடிவுக்கு போனது என்பதை மதிப்பீடு செய்ய முடியும். சாதி வெறியும் சாதிப் பெருமிதமும் மேலோங்கி நிற்கக்கூடிய சமூகச் சூழலில், ஆணவக் கொலை செய்வது குற்றமே அல்ல, அது சாதியின் கவுரவத்தை உயர்த்திப் பிடிக்கிறது என சாதிய சமூகம் கருதுகிற பின்னணியில், அந்த சட்டகத்திற்கு (framework) உட்பட்டு தான் சட்டமும் சாட்சியங்களும் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.  கூலிப்படை கொலை செய்தது என்றால், கௌசல்யாவின் தந்தைக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அது நடந்திருக்க முடியுமா? உறவினர்களே முடிவெடுத்து கொலையை நடத்தி விட்டார்களா? அப்படியே வைத்துக்கொண்டாலும்,