கி.வெங்கட்ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி.வெங்கட்ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஜூன், 2021

மேல்நிலை வகுப்பு – (+2) இறுதித் தேர்வு இந்த ஆண்டுக்கு கைவிடபட்டிருப்பது தவறான முடிவாகும்.- கி.வெங்கட்ராமன்


மேல்நிலை வகுப்பு – (+2) இறுதித் தேர்வு இந்த ஆண்டுக்கு கைவிடபட்டிருப்பது தவறான முடிவாகும். 

கொரோனா தொற்று இரண்டாம் அலை கடுமையாக இருக்கும் சூழலில் +2 தேர்வு உடனடியாக நடத்தமுடியாது என்ற முடிவு சரியே. ஆனால் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வினாக்களை எளிமையாகவும் குறைவான எண்ணிக்கையிலும் அமைத்து 1.30 மணி நேரத் தேர்வாக நடத்த முடிவெடுத்திருக்க வேண்டும்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென்ற மருத்துவர் இராமதாசு கருத்து முற்றிலும் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! - கி.வெங்கட்ராமன்

 தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைக் கூறுபோடும்

பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! 

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. அண்ணல் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக் கோரிக்கையாகவும் அது அப்போது இருந்தது. 

சனி, 17 ஏப்ரல், 2021

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயலும் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயலும் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவராகவும், பேரியக்கம் உறுப்பு வகிக்கும் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் தோழர் பெ. மணியரசன் அவர்களை தாக்கும் நோக்கத்தோடு, கடந்த மூன்று நாட்களாக ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் முகநூல், ட்விட்டர் ஆகியவற்றில் மிரட்டல் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். 

சனி, 16 மே, 2020

“மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” அமைக்கக் கோரி தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கைக் கடிதம்!


“மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்”  அமைக்கக் கோரி தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது : 

"கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் தாய் மண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புவது தற்காப்பு உணர்வு சார்ந்த உளவியல் உந்துதல் ஆகும். எனவே, வெளி மாநிலங்களில் பணிபுரிந்த தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதும், தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் தாயகப் பகுதிக்கு அனுப்பி வைப்பதும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கட்டாயக் கடமையாகும்.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர் தொழிலாளிகள் போய்விட்டால், இங்கு திறக்கப் படவுள்ள சிறு - குறு - நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கும், பெருந்தொழிற் சாலைகளுக்கும் தேவையான தொழிலாளிகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும்.

தமிழ்நாட்டில் மண்ணின் மக்களின் மனித வளம் அதிகம். இப்போது வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேரும் தமிழ்த் தொழிலாளிகளும் இந்த மனித வளத்தில் கூடுதலாகச் சேர்ந்து கொள்வார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் பல இலட்சம் பேர் வேலையின்றி இருக்கிறார்கள். உள்ளூர் வேலைகளை தவிர்த்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களை உள்ளூர் வேலைகளுக்கும், தமிழ்நாட்டு வேலைகளுக்கும் ஈர்க்கும் தனி முயற்சியும் அரசு எடுக்க வேண்டும்.

திங்கள், 23 மார்ச், 2020

கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக!


கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து 
தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக! 
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ள கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, (22.03.2020) அனைத்திந்திய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. வரும் மார்ச்சு 31ஆம் நாள் வரை அனைத்திந்திய அளவில் தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுருமிருந்து 75 மாவட்டங்களை இதர பகுதிகளிலிருந்து துண்டித்து, தனிமைப்படுத்த வேண்டுமென இந்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் உள்ளன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் வரும் மார்ச்சு 31 ஆம் நாள் வரை முழுமையான பணி முடக்கம் செயலாக்கப்படவுள்ளது. போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவினாலும், இம்முடக்கம் காரணமாக எழும் சமூகப் பொருளியல் சிக்கல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து, கடந்த 19.03.2020 அன்று அறிக்கை வெளியிட்ட நாம், இப்பொருளியல் முடக்கம் காரணமாக பாதிக்கப்படும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியம் வழங்க வேண்டுமெனவும் அறிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது.

சனி, 21 மார்ச், 2020

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் முடிவு நீதிமன்ற அவமதிப்பு! - தோழர் கி. வெங்கட்ராமன்


ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் முடிவு நீதிமன்ற அவமதிப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (20.03.2020) எழுப்பிய கேள்விக்கு விடையளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள், அமைச்சரவை முடிவு குறித்த கோப்பின் மீது ஆளுநர் அலுவலகம் அளித்திருக்கிற பதிலை எடுத்துக் கூறினார்.

இராசீவ் காந்தி கொலை வழக்கில், வாழ்நாள் சிறையாளிகளாக உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என்ற தமிழ்நாடு அமைச்சரவைப் பரிந்துரையில் கையெழுத்திடுவதற்கு முன்னால், இராசீவ் காந்தி கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. உள்ளிட்ட நடுவண் அரசின் புலனாய்வு விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிறகு, அதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கருத்தில் கொண்டுதான் முடிவு செய்ய முடியும் என ஆளுநர் அலுவலகம் பதில் அனுப்பியிருப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த முடிவு சட்டவிரோதமானதாகும்.

வியாழன், 19 மார்ச், 2020

குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். - கி.வெங்கட்ராமன்


கொரோனா பேரிடர் காலத்திற்கு வாழ்வூதியம் வழங்குக! - தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

இந்திய அரசு கொரோனா பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பெருமளவு மக்கள் கூடும் பெரிய வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், சுற்றுலா கூடங்கள் போன்றவற்றை மார்ச்சு 31 வரை மூட ஆணையிடப்பட்டுள்ளது. ஆயினும், இவற்றில் பணியாற்றும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டுமொத்த பொருளியல் நடவடிக்கைகளே கிட்டத்தட்ட முடங்கும் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில், தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும்.