டாக்டர் ஜித்தேந்திர சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக்டர் ஜித்தேந்திர சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 அக்டோபர், 2021

ஒருங்கிணைந்து செயல்படுவது வேலையில் மட்டும் அல்ல வேலை செய்யும் இடங்களுக்கும் தேவை.- மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்


 ஒருங்கிணைந்து செயல்படுவது வேலையில் மட்டும் அல்லாமல், வேலை செய்யும் இடங்களுக்கும் தேவை என மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

டெக்னாலஜி பவன் வளாகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை(DST)  மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி(DSIR)  துறைக்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தை, நவராத்திரி விழாவின் போது, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 1 அக்டோபர், 2021

21ம் நூற்றாண்டு சவால்களை சந்திக்க மக்கள் இடையே அறிவியல் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்.- டாக்டர் ஜித்தேந்திர சிங்


 குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர் இடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

வியாழன், 16 செப்டம்பர், 2021

செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது.- டாக்டர் ஜித்தேந்திர சிங்


 செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர்(தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்சபை கூட்டமைப்பு (FICCI) நடத்திய, ‘இந்தியா முன்னிலை வகிக்கிறது-2021’ என்ற உச்சி மாநாட்டில் டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டு பேசியதாவது: 

புதன், 11 ஆகஸ்ட், 2021

எதிர்காலத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.


 எதிர்காலத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:  ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை, எதிர்காலத்தில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. நாட்டில் ஹைட்ரஜன் திட்டத்தை உருவாக்க, 2021 மத்திய பட்ஜெட்டில், தேசிய ஹைட்ரஜன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 4 ஆகஸ்ட், 2021

ஏழைகளின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் வளர்ந்து வரும் துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.- டாக்டர் ஜித்தேந்திர சிங்


 சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரின் வளர்ச்சிக்கு உதவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை மத்திய அரசு  ஊக்குவிப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

புத்தாக்கத் திட்டம் தொடர்பான கேள்விக்கு அவர் மாநிலங்களவையில் அளித்த பதிலில் கூறியதாவது: 

ஏழைகளின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் வளர்ந்து வரும் துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக  பல திட்டங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை அமல்படுத்தி வருகின்றன.  

திங்கள், 14 ஜூன், 2021

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குதான், துபாயில் நடக்கும் உலக கண்காட்சியில் இஸ்ரோவின் சாதனைகளை வெளிப்படுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.- டாக்டர் ஜித்தேந்திர சிங்


 துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கண்காட்சியில் இந்தியாவின் விண்வெளி திறன்  வெளிகாட்டப்படும் என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

உலக கண்காட்சி, துபாயில் 2021 அக்டோபர் 1ம் தேதி முதல்  2022 மார்ச் 31ம் தேதி வரை நடைப்பெறுகிறது. இந்த கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. விண்வெளி தொழில்நுட்பம்  உட்பட 11 கருப்பொருள்களில், இந்தியாவும் தனது தயாரிப்புகளை இதில் காட்சிக்கு வைக்கிறது.

‘‘மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குவதல் (Connecting Minds, Creating the Future)” என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடக்கிறது.

திங்கள், 7 ஜூன், 2021

ஜம்மு ஹிராநகரில் கட்டப்படும் அருண் ஜெட்லி மனமகிழ் மற்றும் விளையாட்டு வளாக பணிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆய்வு செய்தார்


 ஜம்மு ஹிராநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அருண் ஜெட்லி பல்நோக்கு வளாக பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

அகமதாபாத், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆகிய விளையாட்டு வளாகங்களுக்கு  அடுத்ததாக மிகப் பெரிய மனமகிழ் மற்றும் விளையாட்டு வளாகங்களில் ஒன்றாக இது இருக்கும்.

வெள்ளி, 7 மே, 2021

கொவிட் தொடர்பான சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும் வழங்கி, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாபா அணுசக்தி மையம் மற்றும் அணுசக்தித் துறை ஆகியவை துணை நிற்கின்றன


 கொவிட் தொடர்பான சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும் வழங்கி, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாபா அணுசக்தி மையம் மற்றும் அணுசக்தித் துறை ஆகியவை துணை நிற்கின்றன என மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் கூறினார்.

அணுசக்தித் துறை அதிகாரிளுடன், மத்திய அமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கொவிட்-19 காலத்தில் இத்துறை மேற்கொண்ட பொதுநலன் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார்.

வெள்ளி, 31 ஜூலை, 2020

ஜம்மு காஷ்மீரில் PMGSY-II திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு டாக்டர்.ஜித்தேந்திர சிங் ஆன்லைனில் அடிக்கல் நாட்டினார்


ஜம்மு காஷ்மீரில் பி.எம்.ஜி.எஸ்.ஒய்- II திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு டாக்டர். ஜித்தேந்திர சிங் ஆன்லைனில் அடிக்கல் நாட்டினார்.

மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊழியர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று ஜம்மு  காஷ்மீரில் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் - II ( Pradhan Mantri Gram Sadak Yojana - PMGSY-II) இன் கீழ் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் அடிக்கல் நாட்டினார். ஜம்மு & காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் - II திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட உள்ள ரூ.175 கோடி செலவிலான 28 சாலைகள் உட்பட பல இந்தச் செயல்திட்டங்களில் அடங்கும்.  சனுங்கா காஸ் முதல் புக்டூரியல் காஸ் வரை, ஃபலட்டா முதல் பிக்கான் கால வரை, அர்னாஸ் முதல் தாக்கரகோட்டே வரை, ராம்நகர் முதல் துடு வரை, பௌனி முதல் குன்ட் வரை அமைக்கப்படும் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைத்திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன.

வியாழன், 14 மே, 2020

ஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் தகவல் அறியும் உரிமை சட்ட வழக்குகளை மத்திய தகவல் ஆணையம் நாளை முதல் விசாரிக்கும் - டாக்டர் ஜித்தேந்திர சிங்


ஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் தகவல் அறியும் உரிமை சட்ட வழக்குகளை மத்திய தகவல் ஆணையம் நாளை முதல் விசாரிக்கும் - டாக்டர் ஜித்தேந்திர சிங்

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மனுதாரர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) மனுக்களை மத்திய தகவல் ஆணையம் நாளை மே 15 ம் தேதி  முதல் விசாரிக்கத் தொடங்கும் என்று வடகிழக்கு பிராந்திய மேம்பாடு ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், ஓய்வூதியம், பொதுமக்கள் குறைதீர்வு, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார். புதுதில்லியில் தம்மைச் சந்தித்த தலைமை தகவல் ஆணையர்       திரு.பிமல் ஜுல்காவுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் தங்கள் ஆர்டிஐ மனுக்களை வீட்டில் இருந்தவாறே தாக்கல் செய்யலாம் என்றும், மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடுகளுக்குக் கூட யாரும் வெளியே பயணம் செய்யத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.         ‘’வீட்டில் இருந்து நீதி‘’ என்னும் புதிய கலாச்சாரத்துக்கு இது வழிவகுக்கும் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.