கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, பொறியியல் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளுடன், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி, நேற்று (25 ஜுன், 2020) காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.
ஊரடங்கு காலத்தில், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் குறுகிய கால நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும், “ஆக்கப்பூர்வ மனப்பான்மையும் தன்னம்பிக்கையும்” இருந்தால், தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறலாம் என்று அவர் பொறியியல் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்தார்.



