புதன், 1 ஜூலை, 2020

மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாக இந்த ஒப்பந்தம் உள்ளது.- திரு தர்மேந்திர பிரதான்



மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்

துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி வங்கதேசத்தின் மாண்புமிகு பிரதம மந்திரியின் ஆலோசகர் மதிப்புமிகு சல்மான் ஃபஸ்லூர் ரகுமான் மற்றும் வங்கதேசத்தின் மின்சக்தி, எரிசக்தி மற்றும் கனிம மூலவளத் துறைகளின் இணையமைச்சர் மதிப்புமிகு நஸ்ருல் ஹமித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக பெக்சிம்கோவுடன் இணைந்து ஐஓசிஎல் வங்கதேசம் மற்றும் இதர நாடுகளில் ஊரக அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிடும்.

காரீஃப் பருவத்தில் பயிர் விளைச்சலை அதிகபட்சமானதாக்கும் வகையில் சிறந்த நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறு விவசாயிகளிடம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள்


காரீஃப் பருவத்தில் பயிர் விளைச்சலை அதிகபட்சமானதாக்கும் வகையில் சிறந்த நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறு விவசாயிகளிடம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள்

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் விவசாயத்தை லாபம் தரும் நடவடிக்கையாக மாற்றுவதற்கு விவசாயம் செய்யும் நிலத்தின் தன்மையை கவனத்தில்  கொண்டு பல்வேறு வகையான பயிர்களைப் பயிரிட வேண்டும் என்று விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு திரு தோமர் எழுதி உள்ள கடிதத்தில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பருவமழை தொடங்கி உள்ளதாகவும் பல பகுதிகளில் விதைப்பு நிறைவடைந்துள்ளதாகவும் சில பகுதிகளில் வேளாண்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  மேலும் உற்பத்தியை அதிகபட்சமானதாக்கும் வகையில் சிறந்த வேளாண் நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் திரு தோமர் விவசாயிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். 

மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது


மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது

மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கென, மோட்டார் வாகனச் சட்டம் - 2019 கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ளபடி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைபடம் ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. கோல்டன் ஹவர் என்று கூறப்படும் விபத்துக்குள்ளான ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உட்பட பிற சிகிச்சைகளும் இதில் அடங்கும். 

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கக்கூடாது. - E.R.ஈஸ்வரன்


ஆளுங்கட்சியினர் சொல்வதை காவல்துறையினர் அப்படியே கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் தான் 
சாத்தான்குளம் இரட்டை கொலை போன்ற நிகழ்வுகளுக்கான காரணம்.
கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கக்கூடாது. -E.R.ஈஸ்வரன்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கொலை செய்தவர்களை அரசு காப்பாற்ற முயற்சிப்பதை பார்த்தால் ஆளுங்கட்சிகாரர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளுக்கு மருத்துவரும், நீதிபதியும், சிறைத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்திருப்பதை பார்த்தால் இதன் பின்னணியில் அதிகாரம் படைத்தவர்கள் இருப்பது தெளிவாகிறது. 10 நாட்களாகியும் கொலை செய்தவர்களை தமிழக அரசு கைது செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது என்றால் கொலைக்கான தடயங்களை அழிப்பதற்கு கால அவகாசம் கொடுப்பதாகவே தோன்றுகிறது. சாமானிய மக்களே தடயங்களை அழித்து விடுவார்கள் என்று சொல்லி பிணையில் கூட வர முடியாதபடி சிறையில் அடைப்பது காவல்துறையின் வழக்கம். இதுபற்றி முழு விபரங்களும் தெரிந்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வெளியில் விட்டு வைத்திருப்பது தடயங்களை அழிப்பதற்காக இல்லாமல் வேற எதற்காக இருக்க முடியும்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தவறான தகவல்கள் என்று கூறியிருப்பதை கண்டிக்கிறேன். - திரு. எ.வ.வேலு MLA


"உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு 'சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தவறான தகவல்கள்'  என்று கூறியிருப்பதை கண்டிக்கிறேன்" - திரு. எ.வ.வேலு MLA 

உயர்நீதிமன்றமே கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று உத்தரவிட்ட பிறகு “சாத்தான்குளம் விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது” என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து உணவுத்துறை அமைச்சர் திரு. காமராஜ் கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.