வெள்ளி, 4 செப்டம்பர், 2020

வடிகட்டப்பட்ட விஷயங்கள் உங்கள் மூளைக்கு சென்றால் தான், அவை உங்களுக்கு உதவும். குப்பையை புறம் தள்ளி உங்கள் இதயத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.- பிரதமர் நரேந்திர மோடி


 ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களுடன் உரையாடிய பிரதமர்

'உங்கள் காக்கி சீருடையின் மரியாதையை என்றும் மனதில் கொள்ளுங்கள்' காவல் துறையின் மனித நேயம் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வெளிப்பட்டது

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இன்று நடைபெற்ற திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து உரையாடி வருவதாக பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் குறிப்பிட்டார். "கொரோனா வைரஸ் காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனது ஆட்சிகாலத்துக்குள் உங்கள் அனைவரையும் ஏதாவது ஒரு சமயத்தில் சந்திப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

இந்தி வேண்டாம் என நூறாண்டு காலம் கூப்பாடு போட்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி விட்டார்கள். - டாக்டர் K. கிருஷ்ணசாமி,


தேசிய புதிய கல்விக் கொள்கை குலக் கல்வியல்ல!

தமிழ் குல நலக் கல்வி!!

செப்டம்பர் 6 - புதிய தமிழகம் கட்சி விழிப்புணர்வு பிரச்சாரம்! - 

35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசியக் கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான குழு மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இப்புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுவிட்டது. பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. சில மாநிலங்கள் அதன் சாதக, பாதக அம்சங்களை ஆராய கமிட்டி அமைத்துள்ளன. தமிழ்நாடு மட்டும், இப்புதிய தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்றும், புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பிற அம்சங்களை ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட போதும், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகத்தை பொருத்தமட்டில் மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாக வைத்து பல அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை.

சித்த மருத்துவ நிர்வாகம் இப்போதுள்ள நிலையில் நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சித்த மருத்துவ முறைக்கு மூடுவிழா நடத்தப்படும் ஆபத்து உள்ளது.- DR.S.ராமதாஸ்

 சித்த மருத்துவத்துக்கு தனித்துறை அமைத்து 

சென்னையில் தலைமை அலுவலகம் தேவை! - DR.S.ராமதாஸ்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சித்த மருத்துவ இணை ஆலோசகர்  பதவியை கலைத்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முயன்று வரும் நிலையில், உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினா எச்சரிக்கை மணியாகும்.

குருங்குடி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும். - DR. அன்புமணி ராமதாஸ்

 குருங்குடி பட்டாசு ஆலை விபத்தில்  9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது - DR. அன்புமணி ராமதாஸ்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 3 செப்டம்பர், 2020

அடித்தட்டு மக்களின் சிரமங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.- E.R.ஈஸ்வரன்


 

அடித்தட்டு மக்களின் சிரமங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்டங்களுக்கு  இடையேயான பொது போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.

இன்றிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கின்ற மாநில அரசு மாவட்டங்களுக்குள்ளே பொது போக்குவரத்தை அனுமதித்திருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.