செவ்வாய், 6 அக்டோபர், 2020

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.- மு.க.ஸ்டாலின்

 "திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்”

-  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணை, அங்குள்ள நான்கு கயவர்கள் பல்வேறு கொடுமைகளைச் செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் அக்கிரமத்தைக் கண்டிக்கும் வகையில், இந்தப் போராட்டத்தை இன்று நடத்த நாம் முன் வந்திருக்கிறோம்.

அடக்குமுறைக்கு அஞ்சாத தேவேந்திரகுல வேளாளர்கள்.!! வேலும், வாளும் கண்ட சேர, சோழ, பாண்டிய வம்சம் அது. சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நிற்காது.! - DR K. கிருஷ்ணசாமி


 அடக்குமுறைக்கு அஞ்சாத தேவேந்திரகுல வேளாளர்கள்.!! வேலும், வாளும் கண்ட சேர, சோழ, பாண்டிய வம்சம் அது. சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நிற்காது.! - K. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கக்கூடிய 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் அறிவித்தபோது, அதை சாதாரணமாக எண்ணினார்கள். ஆனால், 10,000 என்பதை தாண்டி 20,000 கிராமங்களில் தேவேந்திரகுல மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகி விட்ட உடன் பொறுத்துக்கொள்ள முடியாமல், எடப்பாடி அரசு காவல்துறையினரை கொண்டு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.         

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

விவசாயம் செய்து வரும் உழவர்களுக்கு தடையில்லாச் சான்று வழங்க இந்து சமய அறநிலையத்துறை மறுப்பது நியாயமல்ல.- DR.S.ராமதாஸ்

 வேளாண் மின் இணைப்பு: அறநிலையத்துறை முட்டுக்கட்டை

போடக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டி,ல் வேளாண் விளைநிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு பெறுவதற்கான விதிகளை  தமிழக அரசு தளர்த்தியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், வேளாண் மின் இணைப்பு பெற இந்து அறநிலையத்துறை முட்டுக்கட்டை போட்டிருப்பது அந்த நிம்மதியை பறித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதிகேட்டு திமுக மகளிரணி சார்பில் கைகளில் ஒளியேந்தி பேரணி - மு.க.ஸ்டாலின்


 "உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதிகேட்டு, திமுக மகளிரணி சார்பில், நாளை (05-10-2020) மாலை 5:30 மணியளவில் கிண்டி ராஜீவ்காந்தி சிலையில் இருந்து கைகளில் ஒளியேந்தி பேரணி" 

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மாபெரும் கொடூரங்களாக நடக்கின்றன. சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி, மக்களின் ஆட்சி என்பது மறைந்து அராஜகத்தின் ஆட்சி, சர்வாதிகாரத்தின் ஆட்சி, எதேச்சதிகாரத்தின் ஆட்சி தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கிறது என்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தண்ணீரைப் பெறுவதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும் - வைகோ


 காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற முனைந்து செயலாற்றுக!      - வைகோ வலியுறுத்தல்

காவிரி நடுவர் மன்றம் 1991 இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் தமிழ்நாட்டிற்கு 137 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. 2007 பிப்ரவரி 5இல் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய போது, இதே காலகட்டத்தில் கர்நாடகம் 134 டி.எம்.சி. நீர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.