வெள்ளி, 12 மார்ச், 2021
ஊபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது.- கே.எஸ்.அழகிரி
வெள்ளி, 5 மார்ச், 2021
"மார்ச்-7: 'விடியலுக்கான முழக்கம்' இலட்சிய பிரகடனம்; மார்ச்-10: கழக வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்; மார்ச்-11: களத்தின் கதாநாயகனான கழக தேர்தல் அறிக்கை - மு.க.ஸ்டாலின்
"மார்ச்-7: 'விடியலுக்கான முழக்கம்' இலட்சிய பிரகடனம்;
மார்ச்-10: கழக வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்;
மார்ச்-11: களத்தின் கதாநாயகனான கழக தேர்தல் அறிக்கை;
உதயசூரியன் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்"
- மு.க.ஸ்டாலின் அவர்கள் மடல்.
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை எதிர்பார்ப்பு, ஆட்சி மாற்றம். அதுவும், பத்தாண்டுகால அ.தி.மு.க.வின் ஆட்சியால் இருண்டு பாழாகிக் கிடக்கும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேறுபாடின்றி வெளிச்சம் பாய்ச்சும் வல்லமை மிக்க தி.மு.கழகம் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடும் பெரும் பொறுப்பு, தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகிவிட்ட, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது.


