வெள்ளி, 28 ஜனவரி, 2022

நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் திட்டத்தின் முதல் கப்பலைக் கட்டும் பணி கொல்கத்தாவில் தொடக்கம்.


 நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் (டிஎஸ்சி) திட்டத்தின் முதல் கப்பலின் கட்டுமானப் பணி 27 ஜனவரி 2022 அன்று கொல்கத்தாவில் உள்ள டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனததில்  தொடங்கியது. இந்தியக்  கடற்படையின் பிரதிநிதிகள் காணொலி மூலம் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியக்  கடற்படைக்கு ஐந்து டிஎஸ்சிக்களை (யார்டுகள் 325 முதல் 329 வரை) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பிப்ரவரி 21-ல் கையெழுத்தானது.

இந்தியக் கடற்படை மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


 இந்தியக்  கடற்படை வேலை வாய்ப்பு நிறுவனம் (ஐஎன்பிஏ) மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை 27 ஜனவரி 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. முன்னாள் கடற்படை வீரர்களை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் பணியமர்த்துவதற்காக இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியக்  கடற்படைப்  பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் செயல் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு மோனு ராத்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

150 கிராமங்களுக்கு இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்


 இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் திரு.நாவர் கிஷோன் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமரை 27-ந் தேதி கிரிஷி பவனில் சந்தித்தார். தூதரை வரவேற்ற திரு.தோமர் இந்தியாவுக்கான தூதராக பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான ராஜீய உறவுகள் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து திரு.தோமர் மகிழ்ச்சி வெளியிட்டார். 12 மாநிலங்களில் செயல்பட்டு வரும் 29 திறன் மையங்கள், 25 மில்லியன் காய்கறி தாவரங்கள் மற்றும் 387 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரமான பழ வகைகளை உற்பத்தி செய்து வருவது குறித்து அவர் திருப்தி வெளியிட்டார். இந்த மையங்கள் ஆண்டுக்கு 1.2 லட்சம் விவசாயிகளுக்கும் மேல் பயிற்சி அளித்து வருகிறது.

பாரம்பரியத்துடன் கூடிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அனைவருக்குமான முயற்சிகள் சேர்க்கப்பட வேண்டும்.- பிரதமர் திரு.நரேந்திர மோடி


 இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் நிபுணரான பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். பண்டிட் ஜஸ்ராஜின் நித்தியமான இசை ஆளுமை பற்றி குறிப்பிட்ட பிரதமர், அவரது பெருமைமிகு பாரம்பரியத்தை பண்டிட் சாரங் தேவ் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.

இந்திய இசை பாரம்பரிய வல்லுனர்கள் வெளியிட்ட விசாலமான ஞானம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். இசையின் மகத்துவத்தை உணரும் ஆற்றல் குறித்து குறிப்பிட்ட திரு.மோடி, இந்த வகையில் இந்தியாவின் சாஸ்திரிய இசை பாரம்பரியம் மிகச் சிறப்பானது என்று கூறினார். “இசை நமது உலகளாவிய கடமைகளை தெரிந்து கொள்ள வைக்கும் ஊடகமாகவும், உலகப் பற்றுகளை கடக்க உதவுகிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டும் அமைக்கப்படவில்லை: தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

அறிவிக்கப்பட்டும் அமைக்கப்படவில்லை:
தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் அறிவிக்கப் பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளில் கணிசமானவை இன்னும் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பல மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில், அவற்றுக்கு மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும்.